அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னருடன் பழனிசாமி சந்திப்பு; தி.மு.க மீது புகார்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (14+ 18)
Share
Advertisement
சென்னை: தமிழக கவர்னர் ரவியை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இன்று (அக்.,20) சந்தித்தார். அவரிடம் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தில்லுமுள்ளு செய்ததாக புகார் மனு அளித்தார்.தமிழகத்தின் புதிய கவர்னராக ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கவர்னர் மாளிகையில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி,
தமிழகம், ஊரக உள்ளாட்சி தேர்தல், திமுக, தில்லுமுள்ளு, எதிர்கட்சித்தலைவர், பழனிசாமி, குற்றச்சாட்டு,

சென்னை: தமிழக கவர்னர் ரவியை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இன்று (அக்.,20) சந்தித்தார். அவரிடம் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தில்லுமுள்ளு செய்ததாக புகார் மனு அளித்தார்.

தமிழகத்தின் புதிய கவர்னராக ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கவர்னர் மாளிகையில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் சென்று, மனு அளித்தார்.


latest tamil news


தமிழகத்தின் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சமீபத்தில் கவர்னரை தனித்தனியே சந்தித்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கவர்னரை சந்தித்து விட்டு பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விரிவாக தெரிவித்து கவர்னரிடம் மனு அளித்தோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தில்லுமுள்ளு செய்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்தினர். இதற்கு மாவட்ட கலெக்டர்கள் துணை போயினர்.

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அ.தி.மு.க., சார்பில் வெற்றிபெற்றதை 6 மணி நேரம் கழித்துதான் அறிவித்தார்கள். ஆனால், தி.மு.க.,வினர் வெற்றியை உடனுக்குடன் தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற்றதை மறைத்து தி.மு.க.,வினர் வெற்றிபெற்றதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகி முதலில் முறையிட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையிட்டோம். நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை.


latest tamil news


கடந்த 2019ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த அ.தி.மு.க., அரசு தயாராக இருந்தது. ஆனால், தி.மு.க., நீதிமன்றம் சென்று வார்டு வரையறையில் குழப்பம் இருப்பதாக கூறி தேர்தலை நடத்த விடாமல் செய்தது.
தூத்துக்குடியில் கார் நிறுத்தும் பிரச்னையில் அமைச்சரின் உதவியாளர் பொதுமக்கள் முன்னிலையில் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து அவர் புகார் கொடுத்தும் மிரட்டி வாபஸ் பெற வைத்தனர். சம்பவம் நடந்தது தெரிந்தும் எஸ்.பி., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை


அ.தி.மு.க., பொன்விழா கொண்டாடும் வேளையில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்குடன் முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எங்களிடம் மடியில் கனமில்லை. ஆகையால் வழியில் பயமில்லை. இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (14+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202123:15:38 IST Report Abuse
Aarkay எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். நீங்கள் என்னவோ வோட்டிற்கு காசு கொடுக்காதது போல.... மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். அதுதான் உண்மை. இனி துளிர்விட்டு வளர வேண்டுமானால், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுங்கள். மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்கள். உங்கள் முன்னாள் தில்லுமுல்லு அமைச்சர்களுக்கு மட்டும் குரல் கொடுத்தது போதும்.
Rate this:
Cancel
20-அக்-202121:54:47 IST Report Abuse
Sampath Kumar 1). we are living here without freedom.,3). The government who rules us only 30 of majority. 4) But majority of Tamils say by 65 doesnt look comfortable.5). The democrati action not Justus. We are. going to look for freedom under DMk government. Thanks.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
20-அக்-202119:05:54 IST Report Abuse
Dhurvesh ஆமாம் முந்தைய கவர்னர் கிட்ட கொடுத்த PETITION என்ன ஆச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X