இந்தியா பல மொழிகளின் நாடு: கமல்ஹாசன்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (53) | |
Advertisement
சென்னை: ஹிந்தி தேசிய மொழி என்னும் விவாதம் சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், ‛இந்தியா பல மொழிகளின் நாடு,' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்பவர், உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவில், சமீபத்தில் உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆர்டரில் ஒரு பொருள் டெலிவரி ஆகாததால் சொமேட்டோ சேவை மைய முகரிடம் சாட்
Hindi, National Language, Controversy, MNM, Kamalhaasan, மநீம, மக்கள் நீதி மய்யம், ஹிந்தி, தேசிய மொழி, இந்தியா, கமல்ஹாசன், கமல்

சென்னை: ஹிந்தி தேசிய மொழி என்னும் விவாதம் சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், ‛இந்தியா பல மொழிகளின் நாடு,' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்பவர், உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவில், சமீபத்தில் உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆர்டரில் ஒரு பொருள் டெலிவரி ஆகாததால் சொமேட்டோ சேவை மைய முகரிடம் சாட் செய்துள்ளார். அப்போது, ‛ஹிந்தி தேசிய மொழி, அதை தெரிந்து கொள்ளுங்கள்,' என அந்த முகவர் கூறியுள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த விகாஷ், சாட் உரையாடலை ‛ஸ்கிரீன்ஷாட்' எடுத்து, டுவிட்டரில் பதிவிட்டார். ஹிந்தியை தேசிய மொழி எனவும், அதனை கற்க அறிவுரை கூறிய சொமேட்டோ நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.


latest tamil news


இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், நடந்த சம்பவத்திற்கு சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியது. ஆனாலும், தேசிய மொழி குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்தன. இந்நிலையில், இந்த குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது:


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202123:17:27 IST Report Abuse
Aarkay கருத்து கந்தசாமி கண்டுபிடிச்சிட்டாருபா நாலாப்பு படிப்புக்கே என்ன ஒரு ஞானம்
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
20-அக்-202120:37:45 IST Report Abuse
Nachiar எம் மொழியும் நம் மொழி என்பது திராவிட கட்சிகளுக்கு மறப்பது ஏன்? பிரிவினை வாதம் கூடாது.
Rate this:
Cancel
Siva Santhanam - Pune,இந்தியா
20-அக்-202118:18:32 IST Report Abuse
Siva Santhanam இந்தியாவின் இரு பழம் பெருமை வாய்ந்த மொழிகள் சாமஸ்க்ரிதமும் தமிழும் என்பது இன்று உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவை இரண்டுமே இந்திய மண்ணின் மற்றும் மக்களின் பெருமைகளை பெரிதும் பேசிக் கொண்டிருப்பவை. இதில் ஏதாவது ஒன்றே இந்தியாவின் தேசிய மொழியாக்கப்பட்டிருக்க வேண்டும். புலி , மயில் தாமரை போன்ற தேசிய சின்னங்கள் அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு தெரிவு செய்யப்படவில்லை. இந்திய தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் ஆகியவை அவற்றை பேசும் எண்ணிக்கையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை. மாறாக அவற்றின் பொருள் ஆழம், நாட்டின் பெருமை பேசும் விதத்தை பொறுத்தே அமைக்கப்பட்டுள்ளன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X