பொது செய்தி

இந்தியா

உத்தரகண்டில் கனமழை, நிலச்சரிவு: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டேராடூன்: 'மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்' என, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.உத்தரகண்ட் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியாகி உள்ளனர். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்

டேராடூன்: 'மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்' என, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news




உத்தரகண்ட் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியாகி உள்ளனர். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (அக்., 20) செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது:
உத்தரகண்டில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் தேவைப்படும்.


latest tamil news




சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. நிலச்சரிவால், ஆற்று நீர் கிராமங்களை பாதித்துள்ளது; பாலங்கள் இடிந்துள்ளன. முதலில் சாலைகளை சீரமைக்க வேண்டும். வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அந்தந்த பகுதியில் இருக்கும் அதிகாரிகளை மக்களுக்கு தடையின்றி உணவு, தண்ணீர் கொடுக்க அறிவுறுத்தி உள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
தற்காலிக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலா ரூ.10 கோடி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
20-அக்-202113:53:28 IST Report Abuse
sundarsvpr உலகில் பல இடங்களில் நாடுகளில் பேரழிவுகள் நிகழ்ந்துகொண்டுஇருக்கின்றன. சிலவற்றை முன்கூட்டி அறிந்தாலும் கட்டுப்படுத்த இயலவில்லை. வீரியத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வழிமுறைகள் தேடவேண்டும் இப்போது ரியல் எஸ்டேட் பணிகளை குறைத்து வெள்ளநீர் ( தேங்க காரணம் கட்டங்கள்) செல்லும் பாதையை மற்றும் ஏரி குளங்கள் கண்மாய்களை ஆlaப்படுத்தவேண்டும். இவையெல்லாம் அரசுக்கு தெரியும். ஏன் செய்யவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். பூனைக்கு யார் மாணிக்கட்டுவது. நீர் தெங்கு தடையின்றி குளம் குட்டைகளை நிரப்பி கடலுக்கு செல்லவேண்டும் வீடுகளில் தண்ணீர் புகாமல் தடுக்க முன்னுரிமை அவசியம்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
20-அக்-202113:44:17 IST Report Abuse
Dhurvesh கேரளா அரசை கிண்டல் செய்த சிங்கிகள் ஒருத்தன் காணோமோ இவர்களும் வெள்ளத்தால் அடித்து செல்ல பட்டு விட்டார்களா , கொஞ்சமாவா பேசினீர்கள் , கடவுள் இருக்கிறார் தண்டிப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X