கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர்கள் நியமனம் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதியவிதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கமுடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் பணி நியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளது. கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை
அர்ச்சகர்கள் நியமனம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட்,

சென்னை: கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதியவிதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கமுடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் பணி நியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளது.
கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ஆம்ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு விதிகள் உள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சி.ஐ.டி., நகரை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


latest tamil news


இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் டிஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் பரம்பரை அறங்காவலர்களால் தான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் 28க்கும் மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளது. அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்படவேண்டும் என்றும் ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், ஆனால் அர்ச்சகர் பணிநியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர். வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
21-அக்-202112:54:33 IST Report Abuse
Swaminathan Chandramouli தமிழக நீதிமன்றங்களின் நீதிபதிகள் , அரசாங்க வக்கீல்கள் ஆதியிலிருந்தே கருணாநிதி அவர்களின் கால் கட்டைவிரல்களை சப்பியே பதவி பெற்றுள்ளனர் இது ஆரெஸ் பாரதி ( திமுக ) அவர்களே குறிப்பிட்டுள்ளார் அந்த யஜமான விசுவாசத்தை தற்போது திரு ஸ்டாலின் திமுக முதல்வரால் நியமிக்க பட்ட நியாயாதிபதிகளும் தொடர்கிறார்கள் ஆதலால் இவர்களிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்பது பகற்கனவு தான் இப்போதே ஹிந்துக்கள் அதிக அளவில் ஒன்று சேர்ந்து இந்த அரசாங்கத்தை எதிர்க்க போகிறார்கள் அப்போது தெரியும் ஹிந்துக்களின் பலம் எவ்வளவு , எத்தகையது என்று
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202123:30:54 IST Report Abuse
Aarkay தேவாலயங்களிலும், பள்ளிவாசலிலும் இனி தமிழில்தான் தொழுகை நடத்தவேண்டும். அரசுதான் மௌல்விக்களையும், பங்குத்தந்தையரையும் இனி நியமிக்கும். தேவாலயங்களும், பள்ளிவாசல், தர்க்காக்களும் இனி மாநில கட்டப்பஞ்சாயத்து ஊராட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என இந்த நாத்திகர் கூட்டத்தால் அரசாணை பிறப்பிக்க இயலுமா? மூடர் கூட்டம்
Rate this:
Cancel
20-அக்-202121:47:10 IST Report Abuse
சம்பத் குமார் 1).இந்துக்கள் கோவில் இந்துகளே.2). Boycott court in regards hindu temple.3). Its our country we have right for all people interns of religious activities.4). its our temples.,5l. court doesnt have right to governor our temples.6). we have rights to protect our temples .7). please leave our temples 8). Any government has no power vto interfere in our Hindus religious. Thanks
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X