பொது செய்தி

தமிழ்நாடு

22 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛திருச்சி, சேலம், மதுரை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்றும் (அக்.,20), நாளையும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்,'' என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:தென் தமிழ்நாட்டில் (1 கிலோ மீட்டர் உயர் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
Tamilnadu, 22 District, HeavyRrain, Weather, Report, தமிழகம், 22 மாவட்டங்கள், மிக கனமழை, பெய்யும், வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு,

சென்னை: ‛‛திருச்சி, சேலம், மதுரை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்றும் (அக்.,20), நாளையும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்,'' என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


தென் தமிழ்நாட்டில் (1 கிலோ மீட்டர் உயர் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக



latest tamil news


இன்று 20 மற்றும் 21ம் தேதி: வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


அக்., 22ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் கடலோர மாவட்டங்்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


சோழவந்தான் (மதுரை), சாத்தான்குளம் (துாத்துக்குடி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6 செ.மீ., ஏற்காடு (சேலம்), பெலாந்துறை (கடலுார்), தழுத்தலை (பெரம்பலுார்), தஞ்சை, பாபநாசம் தலா 4 செ.மீ., வத்திராயிருப்பு (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), ஜெயங்கொண்டம் (அரியலுார்), விழுப்புரம், சிங்கோனா (கோவை) தலா 3 செ.மீ.,


latest tamil news


குறிப்பு: வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வரும் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்திப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26ம் தேதி முதல் துவங்குவதற்கான சூழல் நிலவுகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
20-அக்-202113:53:23 IST Report Abuse
vpurushothaman மாமழை போற்றுதும் ...மாமழை போற்றுதும். உழுதல் - உழுதுவிப்போர் - உண்டும் - உண்பிப்போரும் நீடு வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X