சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி மீண்டும் பல்கலைக்கு செல்லும் கீதா கோபிநாத்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் விலகி, வரும் ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலையின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளார்.சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) ஆராய்ச்சி துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட உதவும், உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடுகிறது. இந்த நிதியத்தின்

வாஷிங்டன்: சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் விலகி, வரும் ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலையின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளார்.



latest tamil news



சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) ஆராய்ச்சி துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட உதவும், உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடுகிறது. இந்த நிதியத்தின் தலைவராக கடந்த 2018ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார்.

கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அளித்துவந்த விடுமுறை முடிவடைய உள்ளது. இதனால் அவர் நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி, வரும் ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலையின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளார்.இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைவரான கீதா, பெருந்தொற்றின்போது விமர்சன பகுப்பாய்வை எழுதி வரலாறு படைத்தார். கோவிட் தொற்றால் ஏற்பட்ட பெரும் மந்தநிலைக்குப் பின், மோசமான பொருளாதார நெருக்கடியைக் கடந்து செல்லும்போது அவருடைய கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் மேக்ரோ பொருளாதாரத்தைப் பற்றிய அவரின் ஆழமான அறிவிலிருந்து நாங்கள் பெரிதும் பயனடைந்தோம்.

கோவிட் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய தடுப்பூசி இலக்குகளை நிர்ணயிப்பதில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது. காலநிலை மாற்றம் குறித்த கொள்கைகளை பகுப்பாய்வு செய்ய சர்வதேச நிதியத்துக்குள் ஒரு காலநிலை மாற்றக் குழுவை அமைக்க அவர் உதவி செய்தார். இவ்வாறு அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-அக்-202100:35:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இப்போ சுதந்திரமா கருத்து சொல்ல ஆரம்பிப்பாங்க.. ஆனா பாஜாகாவினர் இப்போ கழுவி ஊத்த ஆரம்பிச்சிடுவாங்க..
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
20-அக்-202117:58:37 IST Report Abuse
Sankar Ramu தமிழக ஐவர் குழு ஏதாவது செய்ஞ்சிருக்காங்களா இதுவரை? டபாள் டக்கர் தியாகராஜனுக்கு எதாவது ஒரு ஐடியாவது கொடுங்கப்பா. தமிழ்நாட்டுக்கு வந்த சோதனையப்பா.
Rate this:
Cancel
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
20-அக்-202117:40:08 IST Report Abuse
Akash கழட்டி vitutanga paavam
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-அக்-202106:51:27 IST Report Abuse
 Muruga Velகழட்டி விடறது சரியான வார்த்தையா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X