பொது செய்தி

தமிழ்நாடு

பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் திகழ்கின்றன. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.வடகிழக்கு பருவ மழை மற்றும் தொடர் மழை காரணமாக இந்த நான்கு ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதில் பூண்டி ஏரி அதன் நீர்பிடிப்பு
Poondi, Sembarambakkam, Lake, Inspection, CM, stalin, பூண்டி, செம்பரம்பாக்கம், ஏரிகள், முதல்வர் ஸ்டாலின், ஆய்வு

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் திகழ்கின்றன. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவ மழை மற்றும் தொடர் மழை காரணமாக இந்த நான்கு ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதில் பூண்டி ஏரி அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பருவமழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்படும் தண்ணீர் மூலம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


latest tamil news



திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாய விளைநிலங்களில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.


latest tamil news



பருவ மழை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக மழை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் செய்துவருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், இன்று (அக்.,20ம் தேதி) சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஏரியில் நீர் இருப்பு, மதகுகள் சீரமைப்பு, ஆகாயத்தாமரை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202105:36:07 IST Report Abuse
ravi chandran தண்ணீர் எப்படி இருக்கும் என்று பார்க்க போயிருப்பார், மக்கள் பணம் தண்டம்.
Rate this:
Cancel
20-அக்-202119:35:42 IST Report Abuse
ராஜா ஆத்தையும் தெரியாது அழகரையும் தெரியாது. சும்மா ஒரு போஸ் குடுத்துட்டு வந்துருப்பார்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
20-அக்-202117:38:18 IST Report Abuse
Bhaskaran ஆகாசத்தாமரையை நிரந்தரமாக ஒழிக்க vali கண்டு பிடிக்கணும்.
Rate this:
20-அக்-202119:36:45 IST Report Abuse
ராஜாஅதுக்கு சூரியனை இல்லாமல் செய்தால் போதும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X