ஆமதாபாத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுபாட்டில்கள் அழிப்பு

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஆமதாபாத்: ஆமதாபாத்தில், போலீசார் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 12 ஆயிரத்திற்கும் அதிகமான, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆமதாபாத் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல இடங்களில் 12,384, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை, இந்தியாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட
ஆமதாபாத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுபாட்டில்கள் அழிப்பு

ஆமதாபாத்: ஆமதாபாத்தில், போலீசார் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 12 ஆயிரத்திற்கும் அதிகமான, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆமதாபாத் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல இடங்களில் 12,384, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை, இந்தியாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் ஆகும். இவற்றின் மதிப்பு ரூ.72.92 லட்சம். இவற்றை, இன்று(அக்.,20) கோடா பகுதியில், துணை கமிஷனர் ரவீந்திர படேல் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில், புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன.


latest tamil news




சோலா உயர்நீதிமன்ற போலீஸ் ஸ்டேசன், நரன்புரா போலீஸ் ஸ்டேசன், வஸ்திராபுர் போலீஸ் ஸ்டேசன், வதாஜ் போலீஸ் ஸ்டேசன் மற்றும் கட்லோடியா போலீஸ் ஸ்டேசன்களில் இந்த சட்ட விரோத மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
21-அக்-202100:50:31 IST Report Abuse
r ravichandran குஜராத் மாநிலத்தில் பூரண மது விலக்கு உள்ளது. இருப்பினும் அண்டை மாநிலமான மும்பையில் இருந்து தினமும் இரயில் , கார் மூலம் கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். எவ்வளவோ முயன்றும் காவல் துறை இதை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. நான் அங்கு ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாதம் தங்கி இருந்தேன். தினமும் ஏதாவது ஒரு இடத்தில் ரெய்டு நடக்கும். என்னுடன் வந்த நண்பர் ஒருவர் மது வாங்க ஏறக்குறைய 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் ரகசியமாக சென்று வந்தார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒன்று அரசே விற்பனை செய்யும் அல்லது விற்பனை செய்ய லைசென்ஸ் வழங்கி வருமானத்தை பெருக்கி கொள்ளும். ஆனால் குஜராத்தில் இந்த ரெண்டும் இல்லை. அண்டை மாநிலமான மும்பையில் இருந்து கடத்தி வரும் மது பானம் தான் விற்பனை செய்ய படுகிறது.
Rate this:
Cancel
20-அக்-202120:39:23 IST Report Abuse
அப்புசாமி எங்கேயோ, யாருக்கோ போய்ச்சேர வேண்டிய மாமூல் போகலை. இல்லேன்னா, தொழில் போட்டியில் போட்டுக் குடுத்துட்டாங்க. பூரண மதுவிலக்கு. இப்புடித்தான் ஆட்சி செஞ்சாரு ஒரு பெரியவர்.
Rate this:
Cancel
20-அக்-202119:29:33 IST Report Abuse
அப்புசாமி பூரண மதுவிலக்கு அமலில் இருக்கு குஜராத்ல... ஆனா உள்நாட்டு சரக்கு கிடையாது. எல்லாம் ஃபாரின் சரக்குதான். சட்டப்படி தயாரிக்கிறாங்கோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X