எட்டுத்திக்கும் பரவும் எட்டு வயது சிறுவனின் பக்திப் பாடல்கள்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை போரூரைச் சார்ந்தவர் ஹரிஹரன் சிவராமன்.வங்கியில் பணியாற்றும் இவர் கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞருமாவார்.இவரது இரண்டாவது மகன் சூர்ய நாராயணன்.தற்போது எட்டு வயதாகிறது.பிஎஸ்பிபி மில்லேனியம் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் படித்து வருகிறார்.வீட்டில் தந்தை பாடுவதை கேட்டும் பார்த்தும் வளர்ந்த சூர்ய நாராயணன் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக பாடlatest tamil news


சென்னை போரூரைச் சார்ந்தவர் ஹரிஹரன் சிவராமன்.வங்கியில் பணியாற்றும் இவர் கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞருமாவார்.


latest tamil news


இவரது இரண்டாவது மகன் சூர்ய நாராயணன்.தற்போது எட்டு வயதாகிறது.பிஎஸ்பிபி மில்லேனியம் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் படித்து வருகிறார்.


latest tamil news


Advertisement

வீட்டில் தந்தை பாடுவதை கேட்டும் பார்த்தும் வளர்ந்த சூர்ய நாராயணன் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக பாட ஆரம்பித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.


latest tamil news


பாட்டில் மகனுக்கு இருக்கும் ஆர்வத்தை கண்ட ஹரிஹரன் முறையாகப் பயிற்சி கொடுத்தார் கூடுதலாக இவரது குருவான கலைமாமணி நெய்வேலி ஆர். சந்தான கோபாலனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.


latest tamil news


பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்த இந்த இரண்டு வருட கொரானா காலத்தை சூர்யநாராயணன் பாடிப்பயிற்சி எடுப்பதற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
தனது ஐந்தாவது வயதிலேயே சில பிரபலமான பக்தி பாடல்களை முழுமையாக சூர்யநாராயணன் பாடியதை மொபைல் கேமிராவில் எடுத்த ஹரிஹரன் அதை தனது முகநுாலில் பதிவிட்டார்.நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து மேலும் சில பாடல்களை பதிவிட பாராட்டு பெருகியது.


latest tamil news


குல்தீப் எம்.பாய் என்பவர் தனது யூட்யூப் சானல் மூலமாக சூர்யநாராயணனை தொழில்முறையாக பாடவைத்து எடுத்த ‛மாடு மேய்க்கும் கண்ணே' உள்ளீட்ட சில பாடல்கள் சூர்யநாராயணனின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இருந்தாலும் சூர்யநாராயணன் ஒரு குழந்தை அந்த குழந்தையின் படிப்பிற்கும் இயல்புக்கும் விளையாட்டுத்தனத்திற்கும் இந்த புகழ், பெருமை குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதில் சூர்யாவின் தாய் ராதா ஹரிஹரன் கவனமாக இருந்து சூர்யநாராயணனை வளர்த்து வருகிறார்.
கர்நாடக இசை மற்றும் தமிழ் பக்தி பாடல்கள் என சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை மனப்பாடமாக பாடக்கூடிய திறன் படைத்த சூர்யநாராயணன் பெரிய பக்க வாத்தியக் கலைஞர்களுடன் சேர்ந்து மேடைக் கச்சேரியும் செய்துள்ளார்.
இப்போது வரை சாஸ்திரிய சங்கீதங்கள் மற்றும் ஏற்கனவே பிரபலபாடகர்களால் பாடி பிரபலமாகியுள்ள தெய்வீகப் பாடல்களை மட்டுமே சூர்யநாராயணன் பக்தியுடன் பாடி வருகிறார் விநாயகர் சதுர்த்தி நவராத்திரி சுதந்திர தின விழா போன்ற ஒவ்வொரு பண்டிகையின் போதும் பாடல்கள் பாடி இவரது பெயரிலான யூட்யூப் சானலில் ( you Tube -sooryanarayanan) பதிவேற்றம் செய்யப்படுகிறது.
‛நமஸ்காரம்' என்று சொல்லிவிட்டு சூர்யlநாராயணன் பாடும் பண்டிகை கால பாடல்களுக்கு இப்போது நிறைய ரசிகர்கள் உள்ளனர்.தாத்தா சிவராமன்,பாட்டி ராஜலட்சுமி,அண்ணன் சங்கர் நாராயணன் ஆகியோர் சூர்யநாராயணனின் முதல் ரசிகர்கள்.
‛முத்தைத்தரு பக்தித் திருநகை ' போன்ற கடினமான பாடல்களைக்கூட அநாயவசமாக பாடும் சூர்யநாராயணனின் முருகன் பாடல்கள் மிகவும் பிரபலம்.‛நீயல்லால் தெய்வமில்லை-எனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா' என்று பாட ஆரம்பித்தால் உருகாதவர் யாரும் இருக்கமுடியாது.
தற்போது மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச கர்நாடக இசை விழாவில் பாடுவதற்கு அழைப்பு வந்துள்ள நிலையில் அதற்காக தற்போது தயாராகிவருகிறார்.பாலகனும் பக்திப் பாடகனுமான எட்டு வயது சூர்ய நாராயணனின் புகழ் திக்கெட்டும் பரவட்டும் அவரது பாடல்களால் பக்தி வளரட்டும்.
தொடர்பு கொள்வதற்கான மெயில் முகவரி: shariharan2k@yahoo.com,
-எல்.முருகராஜ்


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
22-அக்-202117:15:35 IST Report Abuse
Gopi வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X