அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகனுக்கு கட்சியில் பதவி; வாரிசு அரசியல் இல்லையாம்: வைகோ புது விளக்கம்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை: ம.தி.மு.க., தலைமை கழக செயலாளராக வைகோ மகன் துரை நியமிக்கப்பட்டார். இன்று (அக்.20) நடந்த ரகசிய ஒட்டெடுப்பிற்கு பின் கட்சி தலைமை அறிவித்தது. தொண்டர்கள் விருப்பபடியே கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதாக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.ரகசிய ஓட்டெடுப்புசென்னையில், ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று (அக். 20) நடந்தது. அதில் வைகோவின் மகன் துரைக்கு
மகனுக்கு, கட்சி, பதவி, வாரிசு, அரசியல் இல்லையாம்,வைகோ ,புது விளக்கம்

சென்னை: ம.தி.மு.க., தலைமை கழக செயலாளராக வைகோ மகன் துரை நியமிக்கப்பட்டார். இன்று (அக்.20) நடந்த ரகசிய ஒட்டெடுப்பிற்கு பின் கட்சி தலைமை அறிவித்தது. தொண்டர்கள் விருப்பபடியே கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதாக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.


ரகசிய ஓட்டெடுப்பு



சென்னையில், ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று (அக். 20) நடந்தது. அதில் வைகோவின் மகன் துரைக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடந்தது. இதையடுத்து ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில் 106 ஓட்டுக்களில் 104 ஓட்டுக்கள் துரை வையாபுரிக்கு ஆதரவாக கிடைத்தது. இதையடுத்து கட்சியின் தலைமை கழக செயலாளராக துரை நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு வெளியானது.


latest tamil news






வாரிசு அரசியல் இல்லை



இது குறித்து ம.தி.மு.க, பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி, கட்சியின் வாரிசு அரசியல் என்பது கிடையாது. அந்த வகையில் துரை நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை. எனக்கு விருப்பமில்லாமல் தான் இருந்தேன்.தொண்டர்கள் விருப்பபடியே தலைமை கழக செயலாளர் பொறுப்பு துரைக்கு வழங்கப்பட்டு உள்ளது. துரை மக்கள் பணியாற்றினார். தொண்டர்கள் தான் அவரை கட்சிக்குள் இழுத்தனர்.அவர்கள் விருப்பப்படியே துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.


வயதாகி விடவில்லை



பொது வாழ்வுக்கு தேவையான அத்தனை குணாதிசயங்களும் துரைக்கு உள்ளது.

நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். வயதாகவில்லை. இன்று கூட வாலிபால் விளையாடுவேன். மரணம் வரை எனக்கு அரசியலில் இருந்து ஓய்வில்லை; எனக்கு வயது ஆகிவிடவில்லை. வரும் அக். 25-ல் பெரியார், அண்ணா நினைவிடத்தில் துரை மரியாதை செலுத்திய பின், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். இவ்வாறு வைகோ கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-அக்-202123:57:42 IST Report Abuse
elakkumanan மிதியடி, காலனி, செருப்பு போன்ற சொற்கள் எல்லாம் வேறு வேறு அர்த்தம் கொண்டவையே.....இது நான் கண்டுபிடிச்சது......
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
20-அக்-202122:28:50 IST Report Abuse
J. G. Muthuraj இதே விளக்கம் கொடுத்த கலைஞரை என்னென்ன கேள்வியெல்லாம் கேட்டார் இந்த அரசியல்வாதி.....மதிமுகாவில் 'ம' என்ற எழுத்துக்கு இப்ப பொருள் சொல்லுங்க......'மகன்' தானே.....அடுத்து ஏதாவது ஒரு பதவியை.....
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
20-அக்-202122:25:29 IST Report Abuse
அன்பு எனது மகனுக்கு பதவி கொடுக்காமல், உனது மகனுக்கா கொடுப்பேன் என்று நக்கலாக தேவிலால் போன்று வைகோ கேட்டு இருக்கலாம். இத்தனை முட்டுக்கொடுக்க தேவை இல்லை. இந்தியாவில் வாரிசு அரசியல் மட்டும் தான் நடக்கிறது. அடுத்து எடப்பாடியின் வாரிசு வருவார். ஏற்கனவே ராமதாஸ், ஸ்டாலின், கேப்டன் மற்றும் பன்னீரின் வாரிசுகள் அரசியலில் குதித்துவிட்டார்கள். அண்ணாமலை தான் பாவம். வாரிசை கொண்டுவருவதற்குள், அவரின் பதவி போய்விடும். இதில் மிக பெரிய காமெடி, கேப்டனின் பேரப்பிள்ளையும் பத்து வயதில் வாரிசு அரசியலில் வந்தாலும் ஆச்சரியமில்லை. கலைஞர் குடும்பத்திற்கு அடுத்து, வாரிசு அரசியலுக்கு பெயர் போன குடும்பம் கேப்டன் குடும்பம் தான்.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
21-அக்-202112:23:45 IST Report Abuse
Hariஎன்னங்க இப்படி சொல்லிப்புட்டேங்க , சொன்னது வாரிசு இருப்பவர்களுக்குத்தான் வாரிசு அரசியல் செய்யமுடியும் ,வாரிசு இல்லாதவர்களை எப்படி கெடக்கமுடியும் என அறிவார்ந்த ஒரு வார்த்தையை சொன்னதாக ஒரு செய்தி இருக்கு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X