பொது செய்தி

இந்தியா

சீன எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா

Added : அக் 20, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
இடாநகர்: இந்திய சீன எல்லையில் அருணாச்சல் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இந்நிலையில் இன்று (அக்.20) இந்திய- சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியான அருணாச்சல் பிரதேசம் மாநிலம் தவாங்க் பகுதியில் இந்திய ராணுவம்
 
சீன எல்லை, பீரங்கிகள், குவித்தது இந்தியா

இடாநகர்: இந்திய சீன எல்லையில் அருணாச்சல் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இந்நிலையில் இன்று (அக்.20) இந்திய- சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியான அருணாச்சல் பிரதேசம் மாநிலம் தவாங்க் பகுதியில் இந்திய ராணுவம் பெருமளவு பீரங்கிகளை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் அருணாசல பிரதேச மாநிலத்திற்கு அரசு முறைப்பயணம் சென்ற இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் எல்லையில் சீன நிலைகளுக்கு எதிராக இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202107:03:53 IST Report Abuse
அப்புசாமி நம்ம பீரங்குகளை அங்கே குவிச்சா அவன் அங்கேருந்து இன்னொரு இடத்துக்குப் போவான். அங்கே ரெண்டு குடிசை போடுவான். நாம பீரங்கிகளை இங்கிருந்து அங்கே கொண்டு போகணும்.அவன் நடத்துவது war of attrition. நம்மளை எவ்வளவு தூரம் செலவழிக்க வெக்க முடியுமோ அவ்வளவு செய்ய வெப்பான். நாம இறங்கி அவனது நிலத்தில் கூடாரம் போட்டு அவனை செலவு செய்ய வெக்கணும்.
Rate this:
Cancel
21-அக்-202107:03:53 IST Report Abuse
அப்புசாமி நம்ம பீரங்குகளை அங்கே குவிச்சா அவன் அங்கேருந்து இன்னொரு இடத்துக்குப் போவான். அங்கே ரெண்டு குடிசை போடுவான். நாம பீரங்கிகளை இங்கிருந்து அங்கே கொண்டு போகணும்.அவன் நடத்துவது war of attrition. நம்மளை எவ்வளவு தூரம் செலவழிக்க வெக்க முடியுமோ அவ்வளவு செய்ய வெப்பான். நாம இறங்கி அவனது நிலத்தில் கூடாரம் போட்டு அவனை செலவு செய்ய வெக்கணும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-அக்-202101:06:26 IST Report Abuse
மலரின் மகள் தாளிப்பு அருமை. மிகவும் பிடித்திருக்கிறது. இனி இந்தியா இப்படித்தான். சீன எல்லையில் இந்தியா ராணுவ ஆயுதங்களை குவித்துள்ளது. இந்திய எல்லையில் ராணுவம் தயார் என்ற செய்திகள் பழையன. சீன எல்லையில் இந்திய ராணுவம் முன்னேறி செல்கிறது என்றது தான் செய்தி. இந்தியா இன்று நேற்றல்ல கடந்த எழுவருடங்களாக மிகவும் வேகமாக ஆயுதங்களையும் திறமையான மாவீரர்களையும் அங்கே குவித்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் காலத்தில் இந்திய எல்லைக்குள் அத்துமீரி வந்து பிடித்து கொண்டே இருந்தான். நமது மிகவும் திறைமையானவராக பேசப்பட்ட திரு ஆண்டனி ராணுவ அமைச்சர் நம்மிடம் பணம் இல்லை ஆகையால் எல்லையில் அமைதியாக இருக்கவேண்டும் என்றே சொல்லி நம்மை மாதமாகவே வைத்திருந்தார், ராணுவத்தினர் சொல்வதை கேட்பதே இல்லை. நமது வீரர்களின் தலையை பாகிஸ்தானியர்கள் வெட்டுவார்கள் அமைதியாக இருப்பார்கள் காங்கிரஸ் அரசின் பொது. எதோ சீனாவிற்கு சென்று பிரதமர் சிங் இருக்கும் பொது காங்கிரஸ் தலைவர்கள் எதோ மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் அது என்ன ஒப்பந்தம் என்று இன்றுவரையில் சொல்லல்வே இல்லை. காஸ்மீரத்தை இந்தியாவின் அங்கம் என்று முழுதுமாக சொல்லமால் ஆர்டிகிள் 370 எதோ வானதிலிருந்து அலையாக வந்தது போல வைத்து கொண்டிருந்தார்கள். ஒரே இரவில் தூக்கி கடைசி விட்டாயிற்று. போங்கடா போங்க என்று. இப்போது என்னவாயிற்று பாகிஸ்தான் அணுகுண்டு வீசியதா துருக்கி கப்பல் படையை திரட்டி கொண்டு வந்ததா, சீன இரும்பு சகோதாரன் ஏதாவது கனவிலாவது பிதற்றினானா? அனைத்து அரபு தேசங்களும் பொருளாதார தடை கொண்டுவந்ததா? நம்மை புறம்பேசி ஏமாற்றி வந்திருக்கிறார்கள். சீன நேரடியாக இறங்கிய கள்வான் பகுதியில் நடந்ததுஅனைவருக்குமே தெரியும். ரபேல் வரவே கூடாது என்று சீனன் எவ்வளவோ எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் பத்திரிகைக்காரர்களுக்கு பணம்கொடுத்து முயற்ன்றான். இப்போது பாருங்கள் ரபேலும் வந்தாயிற்று யுத்த காலத்திற்கும் சென்றாகிவிட்டது. பிரான்ஸ் முன்னை விட இப்போது அதிகமாக நம்மிடம் நட்பு பாராட்டுகிறது. வல்லரசான பிரான்ஸ் நம் பக்கம். அனைத்திற்கும் சீனாவிற்கு எதிராக பக்கபலமாக ஆயுதங்களை கொடுக்கத்தயாராகவே இருக்கிறது. நமது நாட்டிலியேயே ரபேல் தயாரிக்க படவிருக்கிறது. ஆயத்தங்கள் முடிந்து விட்டன. இஸ்ரேல் உடனைடியாக நிரைய ட்ரோன்களை கொடுத்துவிட்டது. அதையும் சீன எல்லைக்கு கொண்டு சென்றாகிவிட்டது. நமது பீரங்கிகள் டாங்கிகள் அனைத்தும் சிறப்பாக செயல்படத்தக்கவை அல்ல என்றே சீன கூறி நமத்து வைக்க நமது நாட்டிற்கு எதிராக இருக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பணம் கொடுத்து எழுத சொன்னது. ஜானும் ஹமீதும் வல்லவனும் கூட எழுதும் இந்தியாவிற்கு எதிராக எழுதும் கட்டுரைகளை அந்த ஆங்கில பத்திரிகைகள் பிரசுரிக்கும் என்ற நிலைதானே. நான்கு வருடங்களுக்கு முன்பு ரஸ்யாவின் நடந்த ஆயுத கண்காட்சியில் இந்தியாவின் வஜ்ரா ஆயுதங்கள் டாங்கிகள் திறமையே இல்லாதவையென்றும் சீனர்களின் டாங்கிகள் உலகத்தின் முதல் தரம் என்று இந்திய பத்திரிகைகளிலும் டிவி விவாதங்களிலும் எழுதினார்கள் இப்போதோ ஹோவிட்ஸர் வஜ்ரா ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருக்க அதை கண்டு சீன அரசு அஞ்சுகிறது. அவர்கள் ராணுவத்தை பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை, அவர்கள் அப்படி அழுத்த அழுகை கல்நெஞ்சக்காரர்களையும் இறக்கப்படவைத்து விடும் என்று சொல்லுமளவிற்கு இருந்தது. எதோ உளவியலாக இந்திய ராணுவத்தை திருப்பி அனுப்பி வெற்றி வெற்றி என்று கத்தலாம் என்று நினைத்தது. ஏறத்தாழ ஆபத்து ஆண்டுகளாக நாம் இழந்ததை மீட்க சமயம் பார்த்து காதிற்குக்கிறோம், உளவியல் ரீதியாக பலவீன படுத்த முடியுமா ஏன்னா? எல்லையில் பஞ்சாபிய ஹிந்தி மொழிகளில் கூம்பு ஒலி பெருக்கி மூலம் உங்களுக்காக உங்கள் வீட்டில் குடும்பம் காத்திருக்கிறது என்று ஒலி பரப்பினார்கள். நமது ராணுவ வீரர்களோ ஆமாம் நாங்கள் வெற்றி செய்தியோடு வரவேண்டும் என்று ஆரத்தி வைத்து காத்து கொண்டு எங்கள் மகள் மனைவி தங்கை அக்கா காத்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் உங்கள் ராணுவத்தினரை கொன்று வென்று திரும்ப இருக்கிறோம் என்று அங்கே இருக்கிறது நமது ராணுவம். கடந்த ஏழு ஆண்டுகளாக மிகவேகமாக பழைய ஆயுதங்களை எல்லாம் விளக்கி விட்டு மிக நவீன ஆயுதங்கள் கவச உடைகள் மருத்துவ வசதிகள் தொடர்ந்து அங்கே முற்றுகை இடுவதற்கு எதுவாக அனைத்தையும் செய்து யுத்தத்திற்காக காத்திருக்கிறது. சீன இப்போது பயங்கரவாதிகளை பாகிஸ்தான் மூலமாக காஸ்மீரில் அட்டூழியம் செய்வதற்கு பணித்திருக்கிறது. அதை அறிந்த நமது இராணுவம் அங்கே மிக தீவிர வேட்டை யாடுகிறது. அங்கே என்ன மாற்றம் நடந்திருக்கிறது என்றால். தீவிரவாதிகள் ஏதாவது ஓர் கட்டிடத்தில் ஒளிந்து கொண்டு நமது வீரர்களை தாக்குவார்கள் அதி நவீன ஆயுதங்களை கொண்டு. இதனால் நமக்கு இழப்பு அதிகம் இருக்கும். நாம் கட்டிடத்தை விட்டு விட்டு தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை மட்டுமே தாக்கவேண்டும் என்று இருந்தது. ஆனால் இப்போதோ கட்டிடத்தில் தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டிருந்தாள் மிகவும் நல்லதாக போயிற்று என்று ஏவுகணை கொண்டு அந்த கட்டிடத்தை தாக்கி மொத்த தீவிர வாதிகளையும் கூண்டோடு அவர்கள் ஆசை படுகின்ற பதினான்கு நாட்கள் கணக்கான சுவர்க்கத்திற்கு உடனடியா அனுப்பி வைக்கிறது. பயங்கரவாதிகள் அங்கிருந்து வந்து எதாவது கட்டிடத்தில் தங்கவேண்டும், ஏவுகணைத்தாக்குதல் மூலம் மொத்தமாக மரிக்கவேண்டும். இதுவே இப்போது நடக்கிறது அங்கே. பிராக்சி வாருக்கு எதிராக ஏவுகணை விமான தாக்குதல்தான் சரியானது என்று இப்போது நடக்கிறது அல்லவா? முன்போ நாம் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்றுதானே சொல்லி வந்தார்கள். சரியானவர்கள் கையில் ஆட்சி இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கும். மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கினார்கள். நமது மலரில் வரும் கருத்துக்கள் பகுதியிலேயே நிறைய. இப்போது எங்கே போனார்கள் அவ்வளவு பெரும். பேனாவின் வழியில் மறைந்து தாக்கியோரும் காணாமல் போய் விட்டார்கள் போல. காங்கிரசின் காலகட்டத்தில் காசுமீருக்கு செல்வதற்கு சுதந்திர தினத்தன்று மூவர்ண கோடியை ஏற்றுவதற்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தது. இன்றோ அப்படியா. தொடர்ந்து நமது அமைச்சர்கள் காஸ்மீர் சென்று வருகிறார்கள் அதுவும் சில நாட்கள் தங்கியிருந்து நேரடியாக காலா நிலவரம் அறிந்து உத்திரவுகளை அங்கேயே பிறப்பிக்கிறார்கள். பிரமிக்க தக்கவைக்கிறது. பொற்கால நடவடிக்கை என்பது போல நமது ராணுவ குவிப்பு. சீனனை இந்தியா பார்த்து கொள்(ல்)ளு(லு)ம் என்று அமைதியாகவே இருக்கிறது. சீன அத்துணை கூப்பாடு போட்டாலும் அதை பற்றி அமைதியாக அதே நேரம் எந்த நேரமும் யுத்தத்திற்கு வெற்றி பெறுவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று இருக்கிறது நமது அரசும், ராணுவமும். இப்போதெல்லாம் காங்கிரசும் அதன் அனுதாபிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதும் கட்சிகளும், நமது தேசத்திற்கு எதிரானா சிலபலரும், இந்திய ராணுவத்தின் திறனையும் வெற்றியையும் மோடி அரசு பி ஜே பி அரசு தங்களின் வெற்றியிலும் திறனிலும் சேர்க்கக்கூடாது அது ராணுவத்தின் சிறப்பு என்று பிரித்து காட்டுகிறார்கள். தேசமும் தேசியமும் நாட்டுப்பற்றுள்ள அனைவருக்கும் உரித்தானது அதை இன்றைய அரசு செய்கிறது. இந்துக்கள் என்றால் ஒரு எல்லைக்கு மேல் அமைதி காக்க மாட்டார்கள் வலிமை பொருந்தியவர்கள் என்பதை அரசு காண்பிக்கிறது. இந்தியாவை இந்துக்கள் வாழும் பகுதியாக சிலருக்கு பார்ப்பதற்கு வயிறு எரிகிறது. காங்கிரஸ் அரசின்போது அவர்கள் தைரியமாக நமது தேசத்திற்கு எதிராக பேசி வந்தார்கள், இப்போது அப்படியல்ல. அகண்ட பாரதம் என்ற கனவை இந்தியர்கள் அனைவரும் சொல்லவேண்டும். மதத்தின் பெயரால் அவர்கள் விருப்பமற்று இருக்கிறார்கள் அது தவறு. ஆப்கானியர்களுக்கு உணவு தானம் தந்து பசிப்பிணியை போக்குவது இங்குள்ள சில மதத்தினருக்கு பிடிக்கவில்லை. காரணம் ஆப்கானியாயர்கள் அனைவரும் இந்தியாவிற்கு எதிராக இருக்கவேண்டும் என்று மனப்பால் குடிக்கிறார்கள் அவர்கள். உண்மையில் நீங்கள் பலுசிஸ்தான் ஆப்கானியர்கள் வெளிநாடுகளில் வைத்து உணவகங்களில் சென்று உணவருந்தி அவர்களுடன் பேசி பழகி பாருங்கள் அவர்கள் பாகிஸ்தானிற்கு எதிராகவும் இந்தியாவிற்கு மிகவும் ஆதரவாகவும் நட்புடனும் இருப்பது நன்கு தெரியும். அந்த செய்திகள் இங்கு வந்துவிடாமல் ஆப்கானியர்கள் என்றாலே இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்றே பரப்புரை செய்கிறார்கள். தலிபான்களின் சில குழுக்களை தவிர அனைவரும் இந்தியாவிற்கு ஆதரவானவர்கள். சரியா சட்டம் என்று தவராக சொல்லி வருபவர்களை தவிர.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X