அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் துறையில் பில் பாஸ் செய்ய 4 சதவீத கமிஷன்? அண்ணாமலை குற்றச்சாட்டு

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்களின் 29.64 கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு 4% கமிஷன் பெற்றுக்கொண்டு பணம் செலுத்தப்பட்டிருப்பதாக பா.ஜ.., தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி கவனிக்கும் மின் துறை மீது பா.ஜ., தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கிளப்பி வருகிறார். சமீபத்தில் அளித்த

சென்னை: தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்களின் 29.64 கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு 4% கமிஷன் பெற்றுக்கொண்டு பணம் செலுத்தப்பட்டிருப்பதாக பா.ஜ.., தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.



latest tamil news



அமைச்சர் செந்தில்பாலாஜி கவனிக்கும் மின் துறை மீது பா.ஜ., தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கிளப்பி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் நலிவடைந்த மின் நிலையத்தை வாங்கி, அதன் மூலம் 5,000 கோடி ரூபாய் வரை மின் வாரியத்திடமிருந்து ஒப்பந்தம் பெற திட்டமிட்டுள்ளார் என்றார்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு இன்று பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ நாட்டு மக்கள் மீது நலன் இருந்தால், இந்த வாரியத்தின் மீது பற்று இருந்தால் செய்தியை வெளியிடும் போதே ஆதாரத்தையும் வெளியிட்டிருக்க வேண்டும். தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக இது போன்ற அவதூறு செய்திகளை வெளியிடுகிறார். ஆதாரம் இருந்தால் வழக்கு தொடரட்டும்.” என்றார்.


latest tamil news


இந்த நிலையில், இன்று மற்றொரு குற்றச்சாட்டை அதே மின் வாரியம் தொடர்பாக அண்ணாமலை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. திடீரென 4% கமிஷன் எடுத்த பிறகு ரூ.29.64 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை தமிழக மின் துறை அமைச்சர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்? அவரது சென்னை வீட்டில் அமர்ந்திருக்கும் 5 ஆலோசகர்களுக்கு இந்த 4% எங்கே வசூலிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியும். என கூறியுள்ளார்.



மேலும், தூத்துக்குடி அனல் மின் நிலையம் உட்பட பல்வேறு மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு மொத்தம் ரூ.38.4 கோடி பணம் செலுத்தப்பட்டிருப்பதற்கான தகவல் அடங்கிய புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார். இந்த வாரம் அனல் மின் நிலையம், அடுத்த வாரம் சூரிய மின் உற்பத்தி, அதற்கு அடுத்த வாரம், தயாராகிக் கொண்டிருக்கும் 'பெரிய' நிறுவனம் பற்றி செய்திகள் வெளியாகும் என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
20-அக்-202121:55:34 IST Report Abuse
Svs Yaadum oore இப்போதாய முதல்வரே இவன் மீது ஊழல் குற்றச்சாட்டு . இதுக்கும் மேல் என்ன ஆதாரம் ? . இந்த ஊழல் பெருச்சாளிக்கு முட்டு குடுக்க வந்துடுவானுங்க ...
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
20-அக்-202121:54:06 IST Report Abuse
Svs Yaadum oore அ தி மு க வில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறைக்கு, ஜி.பி.எஸ்., கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என, கருணாநிதியே கூறியுள்ளார். தி.மு.க., தொழிற்சங்கமும் போராட்டங்களை நடத்தியது. அதற்கும் மேல் இப்போதைய முதல்வரே இவன் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-202121:51:08 IST Report Abuse
Natarajan Ramanathan நம்பமுடியவில்லையே....கமிஷன் தொகை ரொம்ப குறைவாக சொல்கிறாறே 40% என்று சொன்னாலாவது நம்பலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X