பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 20, 2021
Share
Advertisement
அக்., 21, 2015கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் 1933ல் பிறந்தவர், வெங்கட் சாமிநாதன். சிறுவயதிலேயே வேலைக்காக வட மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தார். பின் தமிழகம் திரும்பியவர், இலக்கிய விமர்சனங்களில் ஈடுபட்டார். 'நடை, கசடதபற, யாத்ரா, வைகை, கொல்லிப்பாவை' போன்ற சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும்


இதே நாளில் அன்று


அக்., 21, 2015



கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் 1933ல் பிறந்தவர், வெங்கட் சாமிநாதன். சிறுவயதிலேயே வேலைக்காக வட மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தார். பின் தமிழகம் திரும்பியவர், இலக்கிய விமர்சனங்களில் ஈடுபட்டார். 'நடை, கசடதபற, யாத்ரா, வைகை, கொல்லிப்பாவை' போன்ற சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் உடையவர்.
நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும், நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். 'இலக்கிய ஊழல்கள், எதிர்ப்புக்குரல், கலை வாழ்க்கை அனுபவம் வெளிப்பாடு, என் பார்வையில்' உட்பட பல நுால்கள் எழுதியுள்ளார். இவர் திரைக்கதை எழுதிய, அக்ரஹாரத்தில் கழுதை
என்ற படம், தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தை பிடித்தது. 2015 அக்., 21ம் தேதி தன் 82வது வயதில் இயற்கை எய்தினார்.கலை விமர்சகர் வெங்கட் சாமிநாதன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X