குஜராத்தில் மது அருந்தினால் கூண்டில் அடைத்து தண்டனை

Updated : அக் 22, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள 24 கிராமங்களில், மது அருந்துவோரை தண்டிக்கும் விதமாக, அவர்களை இரவு முழுதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறையை, நாட் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நாட் சமூகத்தினர், தங்கள் சமூக மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், ஒரு யுக்தியை பின்பற்றி
குஜராத், மது, தண்டனை

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள 24 கிராமங்களில், மது அருந்துவோரை தண்டிக்கும் விதமாக, அவர்களை இரவு முழுதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறையை, நாட் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர்.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நாட் சமூகத்தினர், தங்கள் சமூக மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், ஒரு யுக்தியை பின்பற்றி வருகின்றனர்.


நடைமுறை அமல்

கடந்த, 2017ம் ஆண்டு, ஆமதாபாத் மாவட்டத்தின் மோதிபூரா கிராமத்தில், மது அருந்துவோருக்கு தண்டனையாக, அவர்களிடம் இருந்து, 1,200 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை, நாட் சமூகத்தினர் அறிமுகம் செய்தனர். இது பெரிய தொகை எனக்கூறி இதற்கு எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து குடிபோதையில் நடமாடும் நபர்களை, ஒரு இரவு முழுதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இது தற்போது மாநிலத்தின், 24 கிராமங்களில் உள்ள நாட் சமூக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூண்டில் அடைக்கப்படும் அந்த நபர்களுக்கு, ஒரு பாட்டில் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது.


வன்முறை குறைவு

இது குறித்து மோதிபூரா கிராம தலைவர் பாபு நாயக் என்பவர் கூறியதாவது:இந்த தண்டனையின் விளைவாக, நாட் சமூக மக்கள் பலரும், மது அருந்துவதை நிறுத்திவிட்டனர். மேலும் கிராம வீடுகளில், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களும் பெருமளவு குறைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GSR - Coimbatore,இந்தியா
21-அக்-202118:24:42 IST Report Abuse
GSR ஆரியர்கள் முன்னேற்றத்தை நினைக்கிறார்கள். "திராவிடர்கள்" கோவிலை மூடி டாஸ்மாக்கை திறக்கிரார்கள்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
21-அக்-202117:49:26 IST Report Abuse
தமிழ்வேள் தமிழகத்தில் இதை அமைப்பதாக இருந்தால் , ஒவ்வொரு ஊரை சுற்றியும் அமைக்கவேண்டும் ..அத்தனையும் திமுக / டாஸ்மாக் அடிமை கும்பல் ...
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
21-அக்-202117:24:11 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan சூரிய வம்சம் ஆளுங்களுக்கு அடிச்சுது ஜாக்பாட். தமிழ்நாட்டை சுற்றி எல்லாப்பக்கமும் இரும்பு கம்பி நடும் காண்ட்ராக்ட் அவர்களுக்குத்தான். வடக்கு பார்டர் ஈசனுக்கு, தெற்கு பார்டர் மொழிக்கு, கிழக்கு பார்டர் சேப்புக்கு, மெருகு பார்டர் அம்மனுக்கு. அப்புறம் கர்நாடகாகிட்ட ஆளுக்கு ஒரு லிட்டர் காவிரி தண்ணி கேட்டு போராடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X