லக்கிம்பூர் வழக்கு விசாரணை தாமதம் உபி., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'

Updated : அக் 22, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், மிக தாமதமாக செயல்படுவதாக உத்தர பிரதேச அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. சமீபத்தில் லக்கிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, கார் ஒன்று உள்ளே
லக்கிம்பூர் வழக்கு , உபி., அரசு,சுப்ரீம் கோர்ட் 'குட்டு'

புதுடில்லி:லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், மிக தாமதமாக செயல்படுவதாக உத்தர பிரதேச அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. சமீபத்தில் லக்கிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, கார் ஒன்று உள்ளே புகுந்து மோதியதில், நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில், மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.


கண்டனம்

கடந்த, 8ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாததற்கு அமர்வு கண்டனம் தெரிவித்திருந்தது.இதையடுத்து, இந்த சம்பவத்தில், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டோம். நள்ளிரவு 1:00 மணி வரை அதற்காக காத்திருந்தோம். ஆனால், காலையில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் விசாரணைக்கு ஒரு நாளைக்கு முன்பாக தாக்கல் செய்திருக்க வேண்டும். வழக்கு தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், நான்கு பேர் போலீஸ் காவலில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை காவலில் எடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.


ஒத்திவைப்பு

மேலும், 44 சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், நான்கு பேரின் சாட்சியம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளோரின் சாட்சியங்களை ஏன் பதிவு செய்ய வில்லை.இந்த வழக்கின் விசாரணையில், மாநில அரசு மிகவும் மெதுவாக செயல்படுகிறது. இது தொடர்வதை ஏற்க முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.வழக்கின் விசாரணை, 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-அக்-202119:19:59 IST Report Abuse
Rajagopal வங்காளத்தில் இந்துக்களை கொன்று குவித்த போது, உச்ச நீதிமன்றம் எதனால் உறங்கிக்கொண்டிருந்தது?
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
21-அக்-202112:19:38 IST Report Abuse
Raj குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே ஒரு கட்சி நடத்தப்பட்டு வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X