அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாறி மாறி மோதிக்கொள்ளும் செந்தில் பாலாஜி - அண்ணாமலை!

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: மின் துறையில் பில் பாஸ் செய்ய 4% கமிஷன் என பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி “முறைகேடு நடந்ததற்கு ஆதாரத்தை கேட்டால் வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியின் எக்ஸல் படத்தை காட்டுகிறார் ஆல் பர்பஸ் அதிமேதாவி” என பாய்ந்திருந்தார். பதிலுக்கு அண்ணாமலை, செந்தில் பாலாஜி அ.தி.மு.க., அமைச்சராக இருந்த போது, அவரை ஊழல்வாதி என தி.மு.க.,

சென்னை: மின் துறையில் பில் பாஸ் செய்ய 4% கமிஷன் என பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி “முறைகேடு நடந்ததற்கு ஆதாரத்தை கேட்டால் வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியின் எக்ஸல் படத்தை காட்டுகிறார் ஆல் பர்பஸ் அதிமேதாவி” என பாய்ந்திருந்தார். பதிலுக்கு அண்ணாமலை, செந்தில் பாலாஜி அ.தி.மு.க., அமைச்சராக இருந்த போது, அவரை ஊழல்வாதி என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விமர்சித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.latest tamil newsதமிழக மின் வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி வருகிறார். ரூ.5 ஆயிரம் கோடி மின் கொள்முதல் ஒப்பந்தத்தை பெற ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் நலிவடைந்த நிறுவனத்தை வாங்கியிருப்பதாக கூறினார். தொடர்ந்து இன்று, மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு 29.64 கோடி ரூபாய் பில்லை பாஸ் செய்ய 4% கமிஷன் பெற்றுள்ளனர் என ஒரு பகீர் புகாரை வெளிப்படையாக முன் வைத்தார். செந்தில் பாலாஜி வீட்டில் ஆலோசகர்கள் என்ற பெயரில் உள்ள ஐவருக்கு அது தெரியும் என்றும் கூறினார்.

இதற்கு டுவிட்டர் மூலம் உடனுக்குடன் அளித்துள்ள பதிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது: மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல் பதிவிட்டுள்ளார். அந்த எக்ஸல் கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கிறார் அண்ணாமலை.

இதற்கான ஆதாரத்தையும் அவர் இன்றே வெளியிடவேண்டும். இல்லை அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் மின் நிதிக் கழகம் மற்றும் ஊரக மின்வசதியாக்க கழகம் ஆகிய நிறுவனங்களிடமிருந்து நிதி வந்தது.பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை. என கூறியுள்ளார்.


latest tamil newsஇதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, செந்தில் பாலாஜி அ.தி.மு.க., அமைச்சராக இருந்த போது அவரை ஊழல்வாதி என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசிய வீடியோவை வெளியிட்டு, “ உங்கள் சொந்த கட்சியிலிருந்தே மேலும் ஆதாரம்” என கிண்டலடித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
27-அக்-202114:10:20 IST Report Abuse
Ketheesh Waran அண்ணாமலை இதட்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் கூறியதை மேட்கொள்கட்டுவதேன்? ஸ்டாலின் கூறிய ஊழல் இடம்பெட்டது அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்த ஆட்சியுடன்தான் அண்ணாமலையின் பிஜேபி ஒட்டிஉறவாடியது. அண்ணாமலை அதிகமாக கூவுவதை தவிர்க்கவேண்டும்
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
21-அக்-202114:07:59 IST Report Abuse
Raj அண்ணாமலை சொல்லுவது தப்புன்னா அவர்மேல் மான நஷ்ட வழக்கு போடவேண்டியது தானே. செய்வார்களா?
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-அக்-202110:20:22 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவரும் ஜோதிமணியும் மணல் கொள்ளையில் கூட்டாளிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X