அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க., வில் குஸ்தி கவுன்சிலர்களை கடத்திய போது தடியடி

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
திருப்பத்துார்:ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க., வுக்குள் போட்டி நடப்பதால் கவுன்சிலர்களை கடத்திய போது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தி.மு.க., 11, அ.தி.மு.க., 5, பா.ம.க., 2, வெற்றி பெற்றுள்ளனர்.ஜோலார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ.,

திருப்பத்துார்:ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க., வுக்குள் போட்டி நடப்பதால் கவுன்சிலர்களை கடத்திய போது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.



latest tamil news



திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தி.மு.க., 11, அ.தி.மு.க., 5, பா.ம.க., 2, வெற்றி பெற்றுள்ளனர்.ஜோலார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ., வும், திருப்பத்துார் மாவட்ட செயலாளருமான தேவராஜின் மருமகள் காயத்திரி என்பவருக்கும், வெள்ளக்குட்டையை சேர்ந்த பாரி என்பவரது மனைவி சங்கீதாவும் ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிப்பதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

காயத்திரிக்கு 5 கவுன்சிலர்களும், சங்கீதாவுக்கு 6 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க., பா.ம.க., கவுன்சிலர்கள் ஆதவை பெற்றால் தான் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் காயத்திரியும், சங்கீதாவும் அ.தி.மு.க., பா.ம.க., கவுன்சிலர்கள் 7 பேரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் விழா ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை 10:00 மணிக்கு நடந்தது. இதில் 18 பேரும் பதவி ஏற்றனர்.
பதவி ஏற்ற பின் அவர்கள் மதியம் 1:00 மணிக்கு வெளியே வந்தனர்.அப்போது தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக சொன்ன 6 கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க., பா.ம.க., வை சேர்ந்த 7 கவுன்சிலர்களையும் சங்கீதாவின் ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றிச் சென்றனர்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த காயத்திரி ஆதரவாளர்கள் வேனில் ஏறி விரட்டிச் சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் தள்ளு முள்ளு, மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.போலீசார் மைக்கில் எச்சரிக்கை விடுத்தும் மோதல் நிற்காததால், தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் 10 க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.பின் அனைத்து கவுன்சிலர்களும் தனித்தனியாக வாகனத்தில் ஏற்றி போலீசார் அனுப்பி வைத்தனர்.


குதிரை பேரம்


ஆலங்காயம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் தி.மு.க., 11 பேரை பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால் காயத்ரி, சங்கீதாவு ஆகியோருக்குள் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுளளது. இதனால் கடத்தல் நாடகம் நடந்தது. அது பயனளிக்காததால் குதிரை பேரம் நடக்கிறது.தங்களுக்கு ஓட்டு போட்டால் இரண்டு கோடி ரூபாய் தருவதாக இரு தரப்பிலும் பேரம் நடப்பதால் பரபரப்பு நிலவுகிறது.


புகார்@


@


ஆலங்காயம் தி.மு.க., வினர் கூறியதாவது: மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ., வுமான தேவராஜி அராஜமாக செயல்படுகிறார். ஒன்றயக்குழு தலைவர் பதவியை தன் மருமகளுக்கு கிடைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல் ஆகியோர் சங்கீதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.இதனால் இங்கு தி.மு.க., வில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news




ஏன் போட்டி


முன்னாள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: பஞ்சாயத்து ராஜ் சட்டத்தினால், ஊராட்சி ஒன்றியங்களுக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது.ஒன்றியக் குழு தலைவருக்கு தான் நிதியை கையாளும் அதிகாரம் உள்ளதால் இதில் நிறைய லாபம் பெறலாம் என்பதால் இத்தகைய போட்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202113:19:50 IST Report Abuse
 அருணா கண் கொள்ளா கா(க)ட்சி!!
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
21-அக்-202112:14:45 IST Report Abuse
raja பாருங்கப்பா ... மக்களுக்கு விடியல் ஆட்சியை கொடுக்க ? எப்படி எல்லாம் சண்டைபோட்டுகிறானுவோ இந்த உடன்பிறப்புக்கள்....வாழ்க தமிழ் ஒன்றிய மாக்கல் வளர்க்க தமிழ் ஒன்றியம்.......
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-அக்-202110:53:49 IST Report Abuse
M  Ramachandran இவர்களெல்லாம் கூடி ஒன்றிய அரசியல் விடியல் மூலம் நடத்த போலாகிறார்கள். மக்களுக்கு நல்ல விடியல் இவர்கள் மூலம் கிடைக்க போகிறது என்று ஓட்டளித்தார்களே அவர்களலை மடையர்கள் தான் நீங்கள் என்று நிரூபிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X