சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

இதய நோயில் இருந்து தப்பிக்க...

Added : அக் 20, 2021
Share
Advertisement
இதய மருத்துவர் மதன் மோகன்: உலக சுகாதார நிறுவன தரவு களின்படி உலகளவில் 1.79 கோடி பேர், ஆண்டுதோறும் இதய ரத்த நாள நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக தமிழகம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இதய பிரச்னைகளால் ஏற்படும் மரணங்கள் அதிகம். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், அன்றாட வேலைகளை செய்ய முடியாத அளவுக்கு மூச்சு வாங்குவது, மாடிப்படி ஏறும்போது, சிறிது துாரம் நடந்தாலே மூச்சு
சொல்கிறார்கள்

இதய மருத்துவர் மதன் மோகன்: உலக சுகாதார நிறுவன தரவு களின்படி உலகளவில் 1.79 கோடி பேர், ஆண்டுதோறும் இதய ரத்த நாள நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக தமிழகம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இதய பிரச்னைகளால் ஏற்படும் மரணங்கள் அதிகம். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், அன்றாட வேலைகளை செய்ய முடியாத அளவுக்கு மூச்சு வாங்குவது, மாடிப்படி ஏறும்போது, சிறிது துாரம் நடந்தாலே மூச்சு வாங்குவது, தாடைப் பகுதியில் வலி, நடக்கும்போது பல் வலிப்பது போன்ற உணர்வு, தோள்பட்டை மற்றும் இடது கையில் பரவும் வலி ஆகியவை மூலம் சில, 'அலர்ட்' சிக்னல்களை நம் உடல் கொடுக்கும்.சாப்பிட்டு 20 - 30 நிமிடங்களுக்கு பின் இதய பகுதியிலோ, தோள்பட்டையிலோ வலியை உணர்ந்தால், அது இதயத்தில் ஏற்படும் வலி.ரத்த ஓட்டம் குடலுக்கு செல்லும்போது, இதயத்துக்கு போதுமான ரத்தம் இல்லாமல் வலி ஏற்படும்; எனவே, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.கட்டுப்பாடில்லாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பழக்கம், நீரிழிவு, உடல் இயக்கம் இல்லாதது, அதீத மன அழுத்தம், குறட்டை பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.வீட்டிலுள்ள, 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' கருவியில் இதய துடிப்பை பரிசோதிக்க வேண்டும்.இதய துடிப்பு 70 - 100க்குள் இருக்க வேண்டும். 100க்கு மேல் சென்றால், இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புண்டு; 50க்கு குறைவாக இருந்தால், இதயம் சார்ந்த வேறு பிரச்னையாக இருக்கலாம்.உறங்கும்போது குடும்பத்தினர் யாரையாவது இதய துடிப்பை சரிபார்க்க சொல்லுங்கள்.

ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவியில் 120/80 - 130/90 என்ற அளவு வரை இருக்க வேண்டும்.அதற்கு அதிக மாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்கு பின் பரிசோதித்தால் இயல்பாகவே இந்த அளவுகள் அதிகரிக்கும். எனவே, வேலை செய்யாமல் இருக்கும் போது, இந்த பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை இருந்தால், இதய நோயில் இருந்து தப்பிக்கலாம்.ஆபத்தான பட்டியலில் இருப்பவர்கள் ஆண்டுதோறும், 'இ.சி.ஜி., எக்கோ மற்றும் டிரெட்மில்' ஆகிய பரிசோதனைகளை செய்தால், ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து, உயிரிழப்பை தடுக்க முடியும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X