அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறைந்த அளவே மின்சாரம் கொள்முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Updated : அக் 22, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை:''இந்திய மின்சார சந்தையில், மற்ற மாநிலங்களை விட தமிழக மின் வாரியம் தான் குறைந்த அளவுக்கு மின்சாரம் வாங்கியுள்ளது,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்
குறைந்த அளவு, மின்சாரம் , அமைச்சர் , விளக்கம்

சென்னை:''இந்திய மின்சார சந்தையில், மற்ற மாநிலங்களை விட தமிழக மின் வாரியம் தான் குறைந்த அளவுக்கு மின்சாரம் வாங்கியுள்ளது,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.


பற்றாக்குறை

பின், செந்தில் பாலாஜி கூறியதாவது:தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, சொந்த மின் நிலையங்கள், மத்திய அரசு மின் நிலையங்களில் இருந்து கிடைப்பது போக, பற்றாக்குறையை சமாளிக்க, இந்திய மின் சந்தையில் மின்சாரம் வாங்கப்படுகிறது.அங்கு 24 மணி நேரத்தை ஒவ்வொரு மணி நேரமாக பிரித்து, ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அங்கு நிர்ணயிக்கப்படும் விலைக்கு தான் வாங்க வேண்டும்.

தமிழகத்தின் ஒரு நாள் சராசரி மின் நுகர்வு, 32 கோடி யூனிட்கள்.தமிழக மின் வாரியம், செப்., 24 முதல், இம்மாதம் 19ம் தேதி வரை மின் சந்தையில், 39.70 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. அதே சமயம், அந்த காலகட்டத்தில் ஏற்கனவே உள்ள மின்சாரத்துடன் சேர்த்து, 620 கோடி யூனிட் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

மின் சந்தையில் வாங்கியதில், 6.5 கோடி யூனிட் மட்டுமே, தலா 20 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அதுவும் உச்ச மின் தேவை சமயத்தில் மட்டுமே வாங்கப்பட்டது. இது, மொத்த தேவையில் 1 சதவீதம் தான்.இதே சந்தையில், அதே விலையில் குஜராத், 13 கோடி யூனிட்; ஆந்திரா, 5.20 கோடி யூனிட் கொள்முதல் செய்துள்ளன.

மின் சந்தையில் மின் கொள்முதல் செய்வதில் குஜராத் முதலிடத்திலும்; மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் மூன்றாவது இடத்திலும் உள்ளன.இதை எல்லாம் தெரிந்து வைத்து ஒரு தலைவர் பேச வேண்டும். ஒரு இயக்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பொத்தாம் பொதுவாக சொல்லும் கருத்துகள் ஏற்கக்கூடியது அல்ல. வெறும் மிரட்டல் தொனியில் பேசக் கூடாது.

நாம் சொல்லக்கூடிய குற்றச்சாட்டு சரியா, தவறா என்பதை உணர்ந்து கூற வேண்டும். குற்றச்சாட்டை கூறும் போதே ஆவணங்களை வெளியிட வேண்டும். நல்ல நிர்வாகத்தை தர வேண்டும் என்பதே முதல்வரின் உத்தரவு.தற்போது, இடமாறுதல் உட்பட நிர்வாகத்தில் அனைத்தும் வெளிப்படை தன்மையோடு நடக்கிறது. ஏதோ மொத்த மின்சாரத்தையும் யூனிட், 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்வது போன்று மாய தோற்றத்தை ஏற்படுத்தி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு கூறுகின்றனர்.


அவகாசம்

நலிவடைந்த மின் நிலையம் தொடர்பான புகாருக்கு, 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன். யார் கொள்முதல் செய்கிறார்; யார் அதில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பாக, தன்னிடம் உள்ள ஆதாரத்தை வெளியிட வேண்டும். அப்படி இல்லை எனில், தன்னிடம் ஆதாரம் இல்லை என, ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.இந்திய மின் சந்தையில், குறைந்த விலைக்கு தான் தமிழகம் மின்சாரம் வாங்கியுள்ளது.

இம்மாதம் 18ம் தேதி, யூனிட் குறைந்தபட்சம், 1.99 ரூபாய்க்கும்; அதிகபட்சம், 8.50 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளது. சராசரியாக, 6 ரூபாய்க்கு வாங்கியுள்ளோம். அடுத்த நாள் 19ம் தேதி, 1 யூனிட் குறைந்தபட்சம், 2.20 ரூபாய்க்கும்; அதிகபட்சம், 9 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுஉள்ளது. சராசரியாக, 5.11 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இது, மின்சார சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலை.இவ்வாறு அவர் கூறினார்.


'டாஸ்மாக்' ஊழியர் 134 பேர் நீக்கம்!சென்னை, 'டாஸ்மாக்' அலுவலகத்தில், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட, மண்டல முதுநிலை மேலாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். பின், செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:பொது மக்களின் புகார் அடிப்படையில், 84 மதுக் கடைகள் இடமாற்றம் செய்ய கண்டறியப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில், அதிக விலைக்கு மது வகைகளை விற்பனை செய்த மேற்பார்வையாளர்கள், 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமாக செயல்பட்ட 1,599 பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 933க்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. மதுக் கடைகளில், மது விற்பனை செய்ய இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை.

மாவட்ட மேலாளர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பத்திரிகையாளர் உள்ளடக்கிய, 'வாட்ஸ் ஆப்' குழு ஏற்படுத்துவர். அதிக விலைக்கு விற்பது தொடர்பாக, கடை எண்ணை குறிப்பிட்டு புகார் அளித்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
21-அக்-202118:57:22 IST Report Abuse
Narayanan You may say lot Senthil balaji But none of your words is worthwhile. Can not believe you nor your party leader Stalin . Can rewind Stalin's statements before you join DMK. Are you pure guy after join in DMK ?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
21-அக்-202117:19:51 IST Report Abuse
r.sundaram சுவைபார்க்க முதலில் கொஞ்சமாகத்தான் எடுத்து சுவைத்துப்பார்ப்பார்கள். அதேபோல் நூல் விட்டு பார்ப்பது என்று சொல்வார்களே, அதுமாதிரி முதலில் கொஞ்சமாக கொள்முதல் செய்வது, யாரும் கண்டுகொள்ள வில்லை என்றால் முழு அளவில் தொடர்வார்கள். இங்கு கேட்பது, எவ்வளவு வாங்கினீர்கள் என்று அல்ல எத்தனை ரூபாய்க்கு ஒரு யூனிட் வாங்கினீர்கள் என்பதுதான்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
21-அக்-202113:20:31 IST Report Abuse
raja நீ வாங்கு ராசா... மின்சாரத்தை சொல்லல மாமுலை சொன்னேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X