எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி நிர்வாகிகள் பதவியேற்பு விவகாரம்; ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆணையம் 'பல்டி'

Updated : அக் 21, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பதில் கெடுபிடி காட்டிய மாநில தேர்தல் ஆணையம் திடீரென 'பல்டி' அடித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 28
உள்ளாட்சி நிர்வாகிகள், பதவியேற்பு, ஆளுங்கட்சி, ஆணையம்

சென்னை :உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பதில் கெடுபிடி காட்டிய மாநில தேர்தல் ஆணையம் திடீரென 'பல்டி' அடித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.


வார்டு உறுப்பினர்கள்



இதன் வாயிலாக, 153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 ஒன்றிய கவுன்சிலர்கள், 3,002 ஊராட்சி தலைவர்கள், 23 ஆயிரத்து 185 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கவுன்சிலர்கள் இணைந்து, ஒன்பது மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்கள் இணைந்து, 79 ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இணைந்து, 3,002 ஊராட்சி துணைத் தலைவரை தேர்வு செய்யஉள்ளனர்.

ஊராட்சிகளை பொறுத்தவரை துணைத் தலைவர் பொறுப்பு மிகவும் முக்கியமானது. வங்கியில் பணம் எடுக்கும்போது, தலைவருடன், துணைத் தலைவர் கையெழுத்து இடம் பெற்றால் மட்டுமே ஏற்கப்படும்.இதேபோல, ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவருக்கும் பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. இப்பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, ஆளுங்கட்சியினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். பணம், பதவி, சொத்து உள்ளிட்ட குதிரை பேரங்கள் நடத்தப்பட்டு, ரகசிய இடங்களில் பலர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.




பின்வாங்கியது



இந்நிலையில், நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில், 'அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்; இல்லையேல், மறைமுக தேர்தலில் ஓட்டளிக்க முடியாது' என, மாநில தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. இந்நிலையில், தடாலடியாக அந்த அறிவிப்பில் இருந்து நேற்று பின் வாங்கியது.'மறைமுக தேர்தலுக்கு முன், பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டால் போதும்; அத்தேர்தலில் போட்டியிடலாம்; ஓட்டளிக்கலாம்' என நேற்று அறிவித்துள்ளது.

'அடுத்த மூன்று மாதங்களுக்குள் அல்லது முதல் கூட்டம் நடக்கும்போதும், பதவி ஏற்று கொள்ளலாம்' எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, பதவியை பிடிக்க, வார்டு உறுப்பினர்களை ரகசிய இடங்களில் தங்க வைத்திருக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில், பலர் பங்கேற்கவில்லை.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-அக்-202109:30:48 IST Report Abuse
Lion Drsekar ஆடுறா ராம ஆடுறா ராமா என்றால் ஆடினால் ஆட்டிவிப்பவருக்கும் ஆடுபவருக்கும் யோகம் எல்லாம் தேடி வரும் . பல்ட்டி என்ன அந்தர்பல்டியே அடித்தாலும் அவ்வளவும் .... வந்தே மாதரம்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-202108:56:41 IST Report Abuse
Sriram V Vidiyal Arasu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X