'நீட்' தேர்வு ரத்து வாக்குறுதி தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Updated : அக் 22, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (13)
Advertisement
மதுரை :'நீட்' தேர்வை ரத்து செய்வதாக கருத்து தெரிவிக்க தடை கோரிய வழக்கில், மத்திய - மாநில அரசுகள், தி.மு.க.,விற்கு 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு 2012ல் அறிவித்தது. மாணவர்கள்
'நீட்' தேர்வு ரத்து வாக்குறுதி, தி.மு.க., ஐகோர்ட் 'நோட்டீஸ்'

மதுரை :'நீட்' தேர்வை ரத்து செய்வதாக கருத்து தெரிவிக்க தடை கோரிய வழக்கில், மத்திய - மாநில அரசுகள், தி.மு.க.,விற்கு 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு 2012ல் அறிவித்தது.


மாணவர்கள் குழப்பம்



நீட் நடத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது.நீட் ரத்து செய்யப்படும் என, சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தவறான வாக்குறுதி அளித்தது. அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. நீட் தேர்வை ரத்து செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் தவறான வாக்குறுதியால் நடப்பு ஆண்டு நீட் நடக்குமா, இல்லையா என மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஜூலையில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, நீட் தேர்விற்கு தயாராக திடீரென கேட்டுக் கொள்ளப்பட்டது. குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகும் மன வலிமை மாணவர்களுக்கு இல்லை.செப்., 12ல் நீட் தேர்வு நடந்தது. அரசின் தவறான வாக்குறுதியால் மன அழுத்தம், குழப்பத்தை மாணவர்கள் எதிர்கொண்டனர். சில மாணவர்கள் தற்கொலை செய்தனர். இதற்கு தற்போதைய தமிழக அரசு மற்றும் தி.மு.க.,வினர் தான் பொறுப்பு.இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய், தவறான வாக்குறுதியால் மன அழுத்தத்திற்கு ஆளான ஒவ்வொரு மாணவருக்கும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசு மற்றும் தி.மு.க.,விற்கு உத்தரவிட வேண்டும்.நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய - மாநில அரசுகளுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. தலையிட முடியாதுதமிழக அரசு தரப்பு, 'அரசியல் காரணங்களுக்காக இவ்வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது' என்றது.நீதிபதிகள், தமிழக உயர்கல்வித் துறை, சுகாதாரத் துறை செயலர்கள், மத்திய உயர்கல்வித் துறை செயலர், தேசிய தேர்வு முகமை, தி.மு.க., பொதுச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, நவ., 22ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
21-அக்-202123:56:07 IST Report Abuse
Raj இது ஏமாற்று வேலை இல்லையா அய்யா? அப்ப consumer கோர்ட் எதுக்கு அய்யா? பாட புத்தகத்தில் அடிப்படை சட்டம் சேருங்க அய்யா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
21-அக்-202117:12:53 IST Report Abuse
r.sundaram தேர்தல் வாக்குத்திகளில் உச்சநீதிமன்றம் தலையிடமுடியாது என்று கூறியது உண்மையே. ஆனால் தேர்தல் வாக்குறுதி நடத்தப்படக் கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா? உச்சநீதிமன்றம் நீட் தேர்வை தடைசெய்ய முடியாது என்று தீர்ப்பு கொடுத்த பிறகு, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுப்பது தப்பு அல்லவா? இதை உயர்நீதிமன்றம் பார்க்க வேண்டுமா இல்லையா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-அக்-202115:14:42 IST Report Abuse
sankaseshan நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது 5 லட்சம் 2 கோடி வேலை வாக்குறுதி குறித்து அப்பு கேஸ் பைலை பண்ணட்டும் நோட்டைச்சொல்லியே பொழைப்பை ஒட்டாதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X