இந்தியா

கேள்வி கேட்டவருக்கு 'பளார் ' சர்ச்சையில் காங்., - எம்.எல்.ஏ.,

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
போவா :பஞ்சாபில், கேள்வி கேட்ட இளைஞரின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வால், சர்ச்சை வெடித்துள்ளது.பஞ்சாபில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு பதான்கோட் மாவட்டத்தின் போவா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஜோகிந்தர் பால். கடுமையான தாக்குதல்இவர், நேற்று தன் தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்போது,
 கேள்வி ,பளார்   சர்ச்சை, காங்., - எம்.எல்.ஏ.,

போவா :பஞ்சாபில், கேள்வி கேட்ட இளைஞரின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வால், சர்ச்சை வெடித்துள்ளது.பஞ்சாபில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு பதான்கோட் மாவட்டத்தின் போவா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஜோகிந்தர் பால்.


கடுமையான தாக்குதல்



இவர், நேற்று தன் தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர், ஜோகிந்தரிடம் சில கேள்விகளை எழுப்பினார். அதை கண்டுகொள்ளாத ஜோகிந்தர், தன் உரையை தொடர்ந்தார். விடாத அந்த இளைஞர், ஜோகிந்தரிடம், 'நீங்கள் இந்த தொகுதிக்கு இதுவரை என்ன செய்தீர்கள்' என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அந்த இளைஞரை அருகில் அழைத்த ஜோகிந்தர், அவரின் கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கினார். அவருடன் சேர்ந்து பலரும் அந்த இளைஞரை தாக்கினர். பின், போலீசார் தலையிட்டு அந்த இளைஞரை அங்கிருந்து வெளியேற்றினர்.


latest tamil news



உட்கட்சி பூசல்



இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ராந்தவா கூறுகையில், “எம்.எல்.ஏ., இவ்வாறு நடந்து கொண்டிருக்க கூடாது. மக்கள் பிரதிநிதிகளான நாம், அவர்களுக்கு சேவை புரிய வேண்டும்,” என்றார்.மாநிலத்தில், உட்கட்சி பூசலால் காங்., அரசுக்கு சிக்கல் நிலவி வரும் நிலையில், எம்.எல்.ஏ.,வின் இந்த செயலால், கட்சிக்கு புதிய தலைவலி ஏற்பட்டு
உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
21-அக்-202111:27:03 IST Report Abuse
duruvasar நாம ஊரிலே இதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.. எழுதி குத கேள்வியை கெடக்கவில்லையென்றால் தான் முன்களசு முதுகு வீ ங்கிடும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-அக்-202108:50:29 IST Report Abuse
duruvasar ஊருக்கு ஊர் மொக்கசாமிங்க இருக்கானுங்க.'தண்ணி' போட போன இடத்தில் ஓசியில் ஊருகாய் கேட்டு அடிப்பாரு, பார்த்திருப்பீர்கள்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-அக்-202107:45:29 IST Report Abuse
VENKATASUBRAMANIAN காங்கிரஸ் ராகுல் இதை கவனிப்பாரா. தனக்கு தானே குழி வெட்டி கொள்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X