அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: பொய் மூட்டையை அவிழ்த்து விடுங்கள்!

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்ச.கண்ணன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத வேட்பாளர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றோராக அறிவிக்கப்படுவர்' என, மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மாநில தேர்தல்
Election Commission, EC, election, candidates


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்



ச.கண்ணன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத வேட்பாளர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றோராக அறிவிக்கப்படுவர்' என, மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த எச்சரிக்கை அறிவிப்பை படித்ததும், நமக்கு சிரிப்பு வருகிறதே தவிர அதை, 'சீரியசாக' அணுக முடியவில்லை. காரணம், அந்த எச்சரிக்கை அறிவிப்பில் உள்ள வாசகங்கள் அப்படி!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பிரசாரத்திற்காக செலவழித்த தொகை குறித்த கணக்குகளை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், இனி அவர்கள் வாழ்நாளில் உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிட தகுதியற்றோராக அறிவிக்கப்படுவர் என, அறிவித்து இருந்தால், அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், மாநில தேர்தல் ஆணையத்தின், 'தத்தகா பித்தகா' அறிவிப்பு என்ன சொல்கிறது?


latest tamil news


'தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத வேட்பாளர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றோராக அறிவிக்கப்படுவர்' என்று சொல்கிறது. அதாவது, உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கு காட்டாத வேட்பாளர்கள், நான்காவது ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவராக ஆகி விடுகிறார். மேலும், அவர் அந்த மூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தலில் தான் போட்டியிட கூடாதே தவிர சட்டசபை, லோக்சபா ஏன்... ஜனாதிபதி தேர்தல்களில் கூட போட்டியிடலாம்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களே... சட்டசபை தேர்தலில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவழித்த அரசியல் கட்சிகளே, 100 கோடி ரூபாய், 84 கோடி ரூபாய் தான் செலவு செய்தோம் என, 'புருடா' விடும் போது, நீங்கள் கவலைப்பட தேவையில்லை. 'தேர்தல் பிரசாரத்திற்கு, நான் ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை; வார்டு வாக்காளர்களே, சொந்த காசை செலவு செய்து போட்டியிட வைத்தனர்' என, பொய் மூட்டையை அவிழ்த்து விடுங்கள்.

என்ன செய்து விடும் தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையம் இதுவரை எந்த வேட்பாளரையாவது தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று அறிவித்திருக்கிறதா? இல்லையே! அப்புறம் என்ன... பொய் மூட்டையை சும்மா அவிழ்த்து விடுங்கள்!

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
21-அக்-202117:21:31 IST Report Abuse
S. Narayanan கொலை கொள்ளை மற்றும் இதர புகார்களில் ஈடுபடுபவர்கள் ஆதார் பான் கார்டு ரேஷன் கார்டு வங்கி கணக்கு எல்லாம் உடனடியாக முடக்க பட வேண்டும்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
21-அக்-202116:39:32 IST Report Abuse
Rengaraj சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார் என்றால் கணக்கு ஒப்படைத்தால் மட்டுமே தேர்தல் அதிகாரியின் அதிகார பூர்வ சான்று தரப்படும் என்றும் சொல்லாம். ஒருவர் கட்சி சார்பா நிற்பவர் என்றால் அந்த கட்சி மட்டுமே அனைத்து வேட்பாளர்களுக்கும் தனித்தனியாக கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கலாம். தேர்தல் முடிந்து ஒரு மாதம் மட்டுமே இதற்கு அவகாசம் என்று சொல்லலாம். சட்டசபையில் பதவி ஏற்று ஒரு மாதத்துக்குள் கணக்கு தரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் தகுதி இழப்பு செய்வதற்கு சபாநாயகருக்கோ அல்லது கவர்னருக்கோ பரிந்துரை செய்யலாம் என்று ஒரு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்க வேண்டும். தேர்தல் கணக்கு தராமல் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகவோ ஒருவர் இருப்பின் அந்த உறுப்பினர் சட்டசபையில் வோட்டெடுப்பில் கலந்துகொள்ள கூடாது என்று சபாநாயகருக்கோ அல்லது கவர்னருக்கோ பரிந்துரை செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஒரு கட்சி அப்படி கணக்கு தரவில்லை என்றால் அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்க வேண்டும்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
21-அக்-202116:38:07 IST Report Abuse
DVRR திராவிடர்கள் ஊழல் செய்வது இயற்கை. ஆகவே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X