திருமழிசை, : திருமழிசை பேரூராட்சியில், திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருவது, பக்தர்
களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை பேரூராட்சி. இப்பகுதியில் உள்ள மடவிளாகம் பகுதியில், திருமழிசையாழ்வார் பிறந்த இடம் உள்ளது.
இப்பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களை, சிலர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதில், எவ்வித கட்டடம் கட்ட அனுமதி கிடையாது.
இந்நிலையில், திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தை, குத்தகைக்கு எடுத்த தி.மு.க., பிரமுகர் ஒருவர், சாலையோரமாக வணிக வளாகம் கட்டும்
பணியில் ஈடுபட்டுள்ளார். இது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
![]()
|
அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, திருமழிசை கோவில் நிர்வாக பொறுப்பு அதிகாரி நாராயணன் கூறியதாவது:அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம்; நிரந்தர கட்டடம் கட்ட அனுமதி
கிடையாது. திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் கட்டடம் கட்டும் நபரிடம், நிரந்தர கட்டடம் எதுவும் கட்டக்கூடாது என எச்சரித்துள்ளோம். நேரில் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE