பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை அக்.,26ல் துவங்குகிறது

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : தென் மேற்கு பருவ மழை விலகி, வரும், 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஜூன் 3ல், தென் மேற்கு பருவ மழை துவங்கி, நாடு முழுதும் பரவலாக பெய்துள்ளது. இறுதி கட்டமாக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மேற்கு பருவ
rain, மழை, வடகிழக்கு பருவ மழை

சென்னை : தென் மேற்கு பருவ மழை விலகி, வரும், 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் 3ல், தென் மேற்கு பருவ மழை துவங்கி, நாடு முழுதும் பரவலாக பெய்துள்ளது. இறுதி கட்டமாக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக பெய்யும் கன மழையால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் அணைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மேற்கு பருவ மழை வரும், 25ல் விலகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வங்க கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கில், வரும், 26ம் தேதி முதல், வடகிழக்கு பருவக் காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தென் மேற்கு பருவ மழை, இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை, 26ல் துவங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக சோழவந்தான், சாத்தான்குளம், பென்னாகரம் பகுதிகளில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை.


இன்றும், நாளையும் எங்கெங்கு மழை?


சென்னை வானிலை மைய அறிவிப்பு:வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி உள்பட, 22 மாவட்டங்களில், இன்று கன முதல் மிக கன மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும். சென்னையில் லேசான மழை பெய்யும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-202112:47:40 IST Report Abuse
 rajan ஆமாம்! அப்படியே இடைவிடாது கொட்டு கொட்டுனு கொட்டிக்கொண்டே இருக்கும். ஜாக்கிரதையாக இருங்க. நம்ம சென்னை மழை பற்றி தெரியாதா? காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு. இல்லாவிடில் வடகிழக்கு பருவ மழை வெறும் பிசுபிசுப்புதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X