பொது செய்தி

இந்தியா

கேரளாவில் வெள்ளம்: மீட்புப்பணிகளில் 'ஹாம் ரேடியோ' பயன்படுத்த முடிவு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருச்சூர்: கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டுதல்களை வழங்க 'ஹாம் ரேடியோ'க்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கோட்டயம் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை நீர் தேங்கியதால் பல
Kerala Floods, Network down, Ham radios, rescue, rain

திருச்சூர்: கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டுதல்களை வழங்க 'ஹாம் ரேடியோ'க்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கோட்டயம் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை நீர் தேங்கியதால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.


latest tamil news



நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மின்கம்பங்களும் மரங்களும் சரிந்து விழுந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின் இணைப்பு இல்லாத நேரங்களில் 'சார்ஜ்' செய்ய முடியாமல் மொபைல் போன் இயக்க முடியாமல் போகலாம். மேலும் சில இடங்களில் 'நெட்வொர்க்' இல்லாமலும் போகலாம் என்பதால் 'ஹாம் ரேடியோ' எனப்படும் 'வாக்கி டாக்கி' வாயிலாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு பேச பயன்படுத்தப்படும் ரேடியோக்களை மீட்புப் பணிகளுக்கு உபயோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருச்சூர் மாவட்டத்தில் பிரத்யேக மையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில் ஈடுபடுவோரை தொடர்புகொண்டு அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க இந்த ரேடியோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Ramesh kumar - RAJAPALAYAM,இந்தியா
21-அக்-202116:30:36 IST Report Abuse
V.Ramesh kumar நமது நாட்டில், ஒடிஸ்ஸா, கேரளா, கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தஹேம் ரேடியோ நண்பர்களின் தகவல் தொடர்புசேவையை நன்றாக பயன்படுத்துகின்றனர். ஆனால் நமது மாநிலத்தில், நமது மாவட்ட ஆட்சியர்களில் சிலர் செல்போன் இருப்பதால் இது தேவையில்லை என்கின்றனர். உலகம் முழுவதும் அவசரகாலங்களில் எந்த எதிர்பார்ப்புமின்றி 25 ஆண்டுகளுக்கும் மேல் சேவை செய்யும் நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தினமலருக்கு நன்றி.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
21-அக்-202112:48:08 IST Report Abuse
raja அய்யப்பன் கூட வேளாண்டானுவோ..கோபம் வந்துருச்சி.... அதான்... அதேதான்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-அக்-202108:08:58 IST Report Abuse
duruvasar படத்திலிருப்பது " பிக்பாஸ்" வீடா. தண்ணி வத்தினா கூட அவங்க 100 நாள் வெளியே வர முடியாதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X