பொது செய்தி

இந்தியா

தேர்வு மையத்தை மாற்ற சி.பி.எஸ்.இ., அனுமதி

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : 'சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் தங்கள் பள்ளி இருக்கும் நகரிலேயே முதற்கட்ட தேர்வுக்கான மையத்தை மாற்றிக் கொள்ளலாம்' என சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வு, முறையே, நவ.,30 மற்றும் டிச.,1ல் நடக்க உள்ளது. இதில், பல மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும்பள்ளி அமைந்துள்ள நகரை விட்டு வேறு நகரில்
CBSE, exam centre, class 10, class 12, students

புதுடில்லி : 'சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் தங்கள் பள்ளி இருக்கும் நகரிலேயே முதற்கட்ட தேர்வுக்கான மையத்தை மாற்றிக் கொள்ளலாம்' என சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வு, முறையே, நவ.,30 மற்றும் டிச.,1ல் நடக்க உள்ளது. இதில், பல மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும்பள்ளி அமைந்துள்ள நகரை விட்டு வேறு நகரில் உள்ளதேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தங்களுக்கு வேறு நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தால், அது குறித்து பள்ளி நிர்வாகத்தை அணுகி, தேர்வை மையத்தை மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அதன் வலைதளத்தில் வெளியிடும் உத்தரவுகளை பின்பற்றி, பள்ளி நிர்வாகம் தேர்வு மையங்களை மாற்றும். அதனால் அனைத்து மாணவர்களும் சி.பி.எஸ்.இ., வலைதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
21-அக்-202108:06:03 IST Report Abuse
duruvasar கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் இந்த மாதிரியான பிற்போக்கு சிந்தனைகளை உள்ளே வரவிடமாட்டோம். ஆல்பாஸ், அனைவருக்கும் பட்டம் இதுவே எங்கள் ஒற்றை இலக்கு. வாழ்க தமிழ்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-அக்-202108:02:57 IST Report Abuse
duruvasar தமிழ்நாடு தனித்துவம் பெற்ற மூத்தகுடி. ஆல்பாஸ், அனைவருக்கும் பட்டம் என்ற முற்போக்கு சிந்தையையும் அதை செயலாக்க நெறிகளுடன் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதால் இந்த அறிவிப்பை நகைப்புடன் பார்க்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X