முஸ்லிம் திருமணம் ஒரு ஒப்பந்தம்; ஜீவனாம்சம் வழக்கில் கோர்ட் கருத்து

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
பெங்களூரு: ஜீவனாம்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'முஸ்லிம் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். விவாகரத்து செய்தாலும் சில உரிமைகள், கடமைகள் நிச்சயம் உள்ளன' எனக் குறிப்பிட்டு உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இசாசுர் ரெஹ்மான், 52, கடந்த, 1991ல் மனைவி சாயிரா பானுவை, 'முத்தலாக்' கூறி விவாகரத்து செய்து உள்ளார். அதன் பின், வேறொரு
Muslim marriage, contract, Karnataka HC

பெங்களூரு: ஜீவனாம்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'முஸ்லிம் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். விவாகரத்து செய்தாலும் சில உரிமைகள், கடமைகள் நிச்சயம் உள்ளன' எனக் குறிப்பிட்டு உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இசாசுர் ரெஹ்மான், 52, கடந்த, 1991ல் மனைவி சாயிரா பானுவை, 'முத்தலாக்' கூறி விவாகரத்து செய்து உள்ளார். அதன் பின், வேறொரு திருமணம் செய்து, குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில், சாய்ரா பானு ஜீவனாம்சம் கேட்டு 2002ல் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த, பெங்களூரு குடும்ப நல நீதிமன்றம், மாதம், 3,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து ரெஹ்மான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



தன் உத்தரவில், பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் கூறியுள்ளதாவது: முஸ்லிம் திருமணம் ஹிந்து திருமணம் போல ஒரு புனித சடங்கு அல்ல. அது பல அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தமாகும். அதற்காக, 'மெஹர்' எனப்படும் தொகை வழங்கப்படுகிறது. முத்தலாக் கூறி விவாகரத்து செய்தாலும் சில கடமைகள், உரிமைகள் தொடரும். குரானிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இந்த வழக்கில் ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவு செல்லும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
22-அக்-202108:04:31 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் நீதிபதி ஒரு "AVAA" அவரு கூட குர் ஆன் ஐ படிச்சு அது படி தீர்ப்பு கொடுக்கிறாரே ?
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
21-அக்-202113:06:57 IST Report Abuse
Kalyan Singapore மெஹர் வழக்கம் இந்திய இஸ்லாமியர்களிடம் இருக்கா என்ன ? மத்திய கிழக்கு நாடுகளில் மெஹர் தொகையை திருமண பதிவு பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். பல ஆண்கள் மெஹர் கொடுக்க முடியாமல் இந்தியா வந்து திருமணம் செய்து கொண்டிருந்த வழக்கம் பண்டைய காலங்களில் கேரளத்தில் இருந்தது
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
21-அக்-202112:34:45 IST Report Abuse
Raj இதேமாதிரி இந்துமத பிரச்சனையில் மற்ற மத நண்பர்கள் கருத்து சொன்னால், ஏற்று கொள்கிற மன பக்குவம் இல்லாதவர்கள், விமரிசிக்க கூடாது
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
21-அக்-202115:05:33 IST Report Abuse
கௌடில்யன்மங்களூர் கணேஷ் பீடி லெஷ்மி வெடி விக்கிற நாடு இது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X