பொது செய்தி

இந்தியா

இந்திய கப்பல் அத்துமீறல்; பொய் கூறி சிக்கிய பாகிஸ்தான்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல், தங்கள் கடற்பகுதிக்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்டிய பாகிஸ்தானின் அறிக்கையில் உண்மை இல்லை என்பது தெரியவந்து உள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான், நேற்று முன்தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த 16ம் தேதி, இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும்,
India, Pakistan, Indian submarine, ISPR, Pakistan army

புதுடில்லி: இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல், தங்கள் கடற்பகுதிக்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்டிய பாகிஸ்தானின் அறிக்கையில் உண்மை இல்லை என்பது தெரியவந்து உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், நேற்று முன்தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த 16ம் தேதி, இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை பாக்., கடற்படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுபோன்ற நிகழ்வு, மூன்றாவது முறையாக நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய பாக்., அந்த சம்பவம் தொடர்பாக, ஒரு தெளிவற்ற, 'வீடியோ' ஒன்றையும் வெளியிட்டது. இதற்கு இந்திய கடற்படை தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை தரப்படவில்லை.


latest tamil news



இந்நிலையில், பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து கடல்சார் செயல்பாடுகளின் ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் கூறியதாவது: இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல், தங்கள் கடற்பகுதிக்குள் நுழைந்ததாக பாக்., கூறியதில், உண்மை இல்லை.

அந்தக் கப்பல் கராச்சி துறைமுகத்தில் இருந்து, 278 கி.மீ., தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. எனவே, பாக்., கூற்றில் துளியும் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதை, மேலும் சில நிபுணர்களும் உறுதிபடுத்தி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Bala - tamilnadu,இந்தியா
26-அக்-202113:39:13 IST Report Abuse
S.Bala வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். முடித்தவுடன் பதிவிடுவார்கள்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
21-அக்-202112:40:36 IST Report Abuse
Hari சைனாவின் பல வித்தைகளில் இதும் ஓன்று ,கேரளாவில் முல்லை பெரியார் அணை உடைந்ததுபோல ஒரு படம் காட்டினார்களே ,அதும் சீனாவின் ஒரு ஜோடிப்புதான்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-அக்-202111:16:58 IST Report Abuse
M  Ramachandran மோடி அவர்கள் இந்த பாக்கிஸ்தானை துண்டாட வேண்டியது இப்போது முக்கியம் பலுசித்தானை இந்த தருணத்தில் பிரித்து அவர்கள் நட்ட பலுச்சி மக்களுக்கு வெகு மதியாக கொடுக்க வேண்டும். அது மீறி உட்க்கார்த்திருக்கும் P.O.K. நாம் எடுத்துக்க வேலாண்டியது தான். இதை சாக்கு காட்டி சப்பை மூக்கன் மூக்கை நுழைத்தாள் போட்டு தள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X