தமிழ்நாடு

கோயம்பேடு பஸ் நிலையத்தை என்ன செய்யலாம்? மாற்று திட்டம் குறித்து வல்லுனர் கருத்து பெறும் சி.எம்.டி.ஏ.,

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
வண்டலுார் கிளாம்பாக்கம், திருமழிசை குத்தம்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களில், புதிய புறநகர் பஸ் நிலையங்கள் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், கோயம்பேடு பஸ் நிலையத்தை முழுவதுமாக முடக்கி, 37 ஏக்கர் நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வல்லுனர் கருத்துக்களை பெற, சி.எம்.டி.ஏ., ஏற்பாடு செய்ய உள்ளது.சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில்
கோயம்பேடு, பஸ் நிலையம், மாற்று திட்டம், வல்லுனர், சி.எம்.டி.ஏ.,

வண்டலுார் கிளாம்பாக்கம், திருமழிசை குத்தம்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களில், புதிய புறநகர் பஸ் நிலையங்கள் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், கோயம்பேடு பஸ் நிலையத்தை முழுவதுமாக முடக்கி, 37 ஏக்கர் நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வல்லுனர் கருத்துக்களை பெற, சி.எம்.டி.ஏ., ஏற்பாடு செய்ய உள்ளது.

சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து, வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்தது. இப்பிரச்னைக்கு தீர்வாக, கோயம்பேடில், 37 ஏக்கர் நிலத்தில், 103 கோடி ரூபாயில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டது. கடந்த, 2002ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்துக்கு, 2018ல் எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டப்பட்டது.இங்கு, நாள் ஒன்றுக்கு, 4,500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஐந்து லட்சம் பயணியர் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையத்திற்கு அருகில், ஆம்னி பஸ் நிலையம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை, ஜி.எஸ்.டி., சாலையில் வாகன பெருக்கம் அதிகரித்து, கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை கையாள வண்டலுார் கிளாம்பாக்கத்திலும், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்ளை கையாள திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்திலும் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன.


latest tamil newsஇதில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அடுத்த ஆண்டு மத்தியிலும், குத்தம்பாக்கம் பஸ் நிலையம், 2023 இறுதிக்குள்ளும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்போது, கோயம்பேடு பஸ் நிலையத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதனால், இந்த பஸ் நிலையத்தை இடித்துவிட்டு, இங்குள்ள, 37 ஏக்கர் நிலத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள் கூறியதாவது:புதிய புறநகர் பஸ் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின், கோயம்பேடு புறநகர் பஸ் நிலைய வளாகத்தை, எப்படி பயன்படுத்துவது என, வல்லுனர்களின் கருத்துக்களை பெற இருக்கிறோம். இதற்கான தனியார் கலந்தாலோசகர்களை தேர்வு செய்யும் பணி, விரைவில் துவங்க உள்ளது. தற்போதைய நிலையில், எவ்வித முடிவும் எடுக்கவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கிளாம்பாக்கம், திருமழிசை நிலவரம்!கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கர் நிலத்தில், 384 கோடி ரூபாயில் புதிய பஸ் நிலையம் அமைக்க, 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மாநகர பஸ் நிலைய பணிகள் முடிக்கப்பட்டு, இப்பகுதி மட்டும் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. வெளியூர் பஸ்கள் வந்து செல்லும் இடத்தில், 14 நடைமேடைகள் அமைப்பதற்கான பணிகள், 50 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

பிரதான கட்டடத்துக்கான துாண்கள் அமைக்கும் அடிப்படை கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த பஸ் நிலையத்தை, 2022 மார்ச்சில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், 20 ஏக்கர் பரப்பளவில், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய பஸ் நிலையத்தில், நிலம் வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து பெறப்பட்டு, பூர்வாங்க நில மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன; இந்த நிலைய கட்டுமான பணிகள், 2023ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
22-அக்-202117:01:40 IST Report Abuse
r.sundaram கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலேயே காலி நிலம் கிடைக்கும் போது, புதியதாக வேறு இரு பஸ் நிலையங்கள் தேவைதானா? கோயம்பேடு பஸ் நிலையம் இங்கு தொடரும் என்ற நம்பிக்கையில்தான் மெட்ரோ ரயில் நிலையம் அங்கு அமைந்தது. தற்போது பஸ் நிலையத்தை மாற்றினால் மெட்ரோ நிலையங்களையும் மாற்ற வேண்டி வருமா? மக்களின் வரிப்பணத்தை சூறை ஆடுவதற்காகவே இந்த மாதிரி பஸ் நிலையங்கள் பத்து அல்லது இருபது வருடங்களுக்கு ஒரு முறை புதியதாக கட்டப்படுகிறதா? இதனால் யார் பயன் பெறுகிறார்கள் என்று கண்டறிய ஒரு விசாரணை அமைத்தால் நாளது.
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
22-அக்-202106:47:04 IST Report Abuse
கௌடில்யன் அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் நெரிசலான பகுதியில் இல்லாமல் கிட்டத்தட்ட ஊருக்கு வெளியே இயங்குகின்றன ..சட்டசபை முதல் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் வரை நகருக்கு வெளியே கொண்டு செல்லலாம் ..
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
21-அக்-202122:07:11 IST Report Abuse
THANGARAJ போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தான் வண்டலுர் கிளாம்பாக்கம் (Ordinary காலை நேர போக்குவரத்தை, திருமழிசை குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் கட்ட படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தை இரவு நேர, நெடும் தூர பயண பஸ்கள் SETC பஸ்கள் மட்டும் வந்து (operate) போகலாம். இதன் மூலம் அனைத்து பேருந்து நிலையத்தையும் பயன் படுத்தலாம். மேலும் கோயம்பேடில் இருந்து வண்டலுர் கிளாம்பாக்கம் மற்றும் திருமழிசை குத்தம்பாக்கம் டவுன் பஸ் இயக்கலாம். இதன் மூலம் போக்குவரத்து குறையும், சென்னை மத்திய மக்களும் அனைத்து இடங்களும் பயன் படுத்தலாம். உ தா மதுரை மாட்டு தாவணியில் இருந்தது ஆரப்பாளையம், திருமங்கலம், பெரியார் பஸ் நிலையம் போன்றவை இணைக்க பட்டு உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X