சென்னை: 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, இனி எந்த தேர்தலிலும், பா.ம.க., தனித்தே போட்டியிடும். கட்சியில் இருந்து கொண்டு யாரும் துரோகம் செய்யாதீர்கள்; வேண்டுமானால் இப்போதே கட்சியை விட்டு போய் விடுங்கள்' என எச்சரித்ததோடு, 'கட்சியில் உளவு படை உருவாக்கப்படும்' என்றும் அறிவித்தார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.
தனித்து போட்டி என்ற முடிவால், வன்னியர் சமுதாய ஓட்டு வங்கியை, திராவிட கட்சிகளுக்கு செல்லவிடாமல், ஒட்டுமொத்தமாக தக்க வைக்கலாம்; தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, அக்கட்சிக்கு தாவ விடாமல் தடுக்கலாம் என்பது ராமதாசின் கணக்கு.

'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இன்றி, தனித்து போட்டி' என, பா.ம.க., அறிவித்து விட்ட நிலையில், தேவையில்லாமல் பா.ம.க.,வை சீண்டி, தி.மு.க.,வின் பலமாக உள்ள வன்னியர் சமுதாய ஓட்டு வங்கியில் சேதாரம் ஏற்படுத்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் விரும்பவில்லை என்பதால், 'ஆளிழுப்பு வேலைகள் வேண்டாம்' என, கட்சிக்காரர்களை 'அடக்கி' வைத்திருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE