அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பில் உற்சாகம்: ‛சேர்மன்' ஆக ‛கபடி கபடி' ஆட்டம் துவக்கம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று பதவியேற்பு நடந்தது.ஒன்றியக்குழு தலைவர் இடத்தை பிடிக்க, சுயேச்சைகளை சரிகட்டும் 'கபடி கபடி' ஆட்டத்தை, உள்ளாட்சி பிரதிநிதிகள் துவக்கியுள்ளனர்.காஞ்சிபுரத்தின் ஐந்து ஒன்றியங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் எட்டு ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6,
உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பில் உற்சாகம்: ‛சேர்மன்' ஆக ‛கபடி கபடி' ஆட்டம் துவக்கம்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று பதவியேற்பு நடந்தது.

ஒன்றியக்குழு தலைவர் இடத்தை பிடிக்க, சுயேச்சைகளை சரிகட்டும் 'கபடி கபடி' ஆட்டத்தை, உள்ளாட்சி பிரதிநிதிகள் துவக்கியுள்ளனர்.காஞ்சிபுரத்தின் ஐந்து ஒன்றியங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் எட்டு ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6, 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. 12ல் ஓட்டு எண்ணப்பட்டு, இரு மாவட்டங்களிலும் 5,528 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவியேற்பு நிகழ்ச்சி, கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.தேர்தல் நடத்து அதிகாரிகளான நாராயணன், ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மொத்தமுள்ள 11 மாவட்ட கவுன்சிலர்களில், சீனியாரிட்டி அடிப்படையில் வந்து, உறுதிமொழி படித்து பதவியேற்றனர்.ஒன்றிய கவுன்சிலருக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். வார்டு வரிசை எண்படி, கவுன்சிலர்கள் வந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு, உறுதிமொழி வாசித்து பதவியேற்றனர்.

மொத்தம் 5,000க்கும் மேற்பட்டோருக்கு பதவியேற்பு செய்து வைக்கப்பட்டது.புதிதாக பதவியை பிடித்தவர்கள், பல ஆண்டுகளாக கட்சியில் இருந்து உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியோர் என பலரும், பதவியேற்பு நிகழ்வில் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்; முகங்களில் சிரிப்பு களை கட்டியது.பல இடங்களில் பதவியேற்றோருக்கு கட்சியினர் போர்த்திய சால்வை, துண்டுகளை அவர்களது உதவியாளர்கள் மூட்டைக்கட்டி எடுத்து சென்றனர்.உத்திரமேரூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் கும்பலாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர்.


latest tamil news



நுழைவாயிலில் இருந்த போலீசார், பதவியேற்கவுள்ள கவுன்சிலருடன், கூடுதலாக ஒருவர் மட்டுமே செல்ல அனுமதித்தனர்.இதனால் உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரனுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பல இடங்களிலும் இதுபோல் நடந்தது.கட்சியினருடன் வந்த ஆதரவாளர்களுக்கு மதிய உணவு, பிரியாணி, பிஸ்கட், டீ, மிக்சர், ஸ்வீட், வாட்டர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன.முன்னதாக, ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நுழைவாயிலில் வாழைமரம் கட்டப்பட்டது; பந்தல் மேடை அமைக்கப்பட்டிருந்தது. கிராமங்களில் விழாக்கோலம் காணப்பட்டது.வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்கள் பலர், பதவியேற்கும் கூட்ட அரங்கில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை; முக கவசம் அணியவில்லை.ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பழனியின் மனைவி விஜயா, குன்றத்துார் ஒன்றிய கவுன்சிலராக நேற்று பதவியற்றார்.

இதேபோல், தற்போதைய மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள குன்றத்துார் ஒன்றிய தி.மு.க., செயலர் மனோகரனின் மனைவி சரஸ்வதி ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்றார். சரஸ்வதி, குன்றத்துார் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிஉள்ளது.

குழுக்கள் இடையே போட்டி
திருக்கழுக்குன்றம் 16ம் வார்டில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு வென்ற, முன்னாள் செய்யூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு, ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கருதப்படும் நிலையில், பதவியேற்பைத் தொடர்ந்து, அவரது தலைமையில், தி.மு.க., - வி.சி., - சுயேச்சை என, 19 கவுன்சிலர்கள், இரண்டு வேன்களில், மாமல்லபுரம் ரிசார்ட்டிற்கு புறப்பட்டனர்

தி.மு.க., பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு, தி.மு.க., ஒன்றிய செயலர் மற்றும் கவுன்சிலர் ராமசந்திரன் மனைவி - லத்துார் ஆறாம் வார்டு கவுன்சிலர் சாந்தி, தி.மு.க., பிரமுகர் பாபுவின் மனைவி - 11ம் வார்டு கவுன்சிலர் சுபலட்சுமி ஆகியோர் இடையே, போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், பதவியேற்பைத் தொடர்ந்து, இரண்டு கவுன்சிலர்களும், ஆதரவு கவுன்சிலர்களுடன், தனித்தனி குழுவாக புறப்பட்டனர்

ஸ்ரீபெரும்புதுாரில் ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்ற 20 பேருக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை, வெற்றி பெற்ற தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் வழங்கினார். கருணாநிதியின் சிலையை, முதலில் வாங்கிய அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பழனியின் மனைவி விஜயா, பின் அந்த சிலையை வழங்கியவரிடமே திருப்பி கொடுத்துவிட்டார்

வாலாஜாபாத் ஒன்றியம், ஒன்றாவது வார்டு தி.மு.க., பெண் ஒன்றிய கவுன்சிலர், தெலுங்கு மொழியில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதால், அவர் பதவி பிரமாணம் ஏற்கும்போது, தெலுங்கு மொழியில் எழுதி, தமிழில் வாசித்து பதவி ஏற்றார். 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலரான காங்.,கைச் சேர்ந்தவர், 'கட்சியின் தலைவி சோனியா காந்தி வாழ்க' எனக்கூறி, பதவி ஏற்றார்

. - நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X