அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளே; வெளியே: பழனிசாமி வியூகம்! பன்னீர்செல்வம் மவுனம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: அ.தி.மு.க., பொன்விழா ஆண்டை ஒட்டி, ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு சசிகலா சென்று, மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க., கொடி ஏற்றி, கல்வெட்டு திறந்தார். அடுத்ததாக, விழுப்புரம் மாவட்டத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். சசிகலா பங்கேற்ற நிகழ்ச்சியில், அ.ம.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தான் பங்கேற்றனர்; அ.தி.மு.க., தொண்டர்கள் பங்கேற்கவில்லை. 'சசிகலாவை
OPS, EPS, ADMK

சென்னை: அ.தி.மு.க., பொன்விழா ஆண்டை ஒட்டி, ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு சசிகலா சென்று, மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க., கொடி ஏற்றி, கல்வெட்டு திறந்தார். அடுத்ததாக, விழுப்புரம் மாவட்டத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். சசிகலா பங்கேற்ற நிகழ்ச்சியில், அ.ம.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தான் பங்கேற்றனர்; அ.தி.மு.க., தொண்டர்கள் பங்கேற்கவில்லை. 'சசிகலாவை சேர்க்க வேண்டாம்' என்பதில், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உறுதியாக உள்ளார்.


latest tamil news'கடந்த 2001, 2011, 2016 போல, 2026ல் பலமான கூட்டணி அமைத்து வெற்றி பெறலாம். அ.ம.மு.க.,வுக்கு தற்போது, 2.5 சதவீதம் ஓட்டுகள் உள்ளதால், தினகரனை கூட்டணியில் சேர்க்கலாம்; ஆனால், சசிகலாவை சேர்க்க வேண்டாம்' என, பழனிசாமி கணக்கு போட்டு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார்.

'உள்ளே, வெளியே' கணக்கை பொறுமையாக கேட்ட பன்னீர்செல்வம், வழக்கம்போல் மவுனத்தை தன் பதிலாக கொடுத்துள்ளார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியோ?

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
21-அக்-202115:39:43 IST Report Abuse
Vena Suna இவனுங்க சேருவானுங்க சசிகலாவோட.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-அக்-202114:22:20 IST Report Abuse
Vijay D Ratnam ஒண்ணாம் நம்பர் தில்லாலங்கடி டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் சேர்த்தால் அது வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொள்வதற்கு சமம். மன்னார்குடி மாபியாவிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுக்க படாதபாடு பட்டுவிட்டார்கள். கண்டிப்பாக பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இப்படியொரு மட்டமான யோசனையை சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. 2.5 சதவிகித வாக்குகள் எல்லாம் ஒரு ஆண்டுக்குள் கரைந்து காணாமல் போய்விடும். ஏகப்பட்ட வழக்குகள் பெண்டிங் இருக்குது. ரெண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ரெய்டில் சிக்கி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என்று வழக்கு இருக்குது. இந்த மொள்ளமாரிகளுடன் சேர்ந்து இருக்குற வாக்குகளை இழக்கமாட்டார்கள். 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக பாஜக இரண்டு கட்சிகள் மட்டுமே கூட்டணியமைத்து போட்டியிட்டு வெல்ல முடியும். பல்டி ராமதாஸை கூட்டணிக்குள் விடக்கூடாது. ஹிந்து வாக்குகள் 2021 தேர்தலிலேயே பெருமளவு கன்சாலிடேட் செய்யப்பட்டுவிட்டது. அதை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தினால் போதும். மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகள் ஆட்டம் க்ளோஸ். மற்றபடி கமல்ஹாசன், சீமான் போன்ற பஃபூன்கள் பக்கம் ஹிந்து வாக்குகள் செல்லாமல் அதிமுக பாஜக கூட்டணி காய்களை நகர்த்த வேண்டும்.
Rate this:
Ketheesh Waran - Bangalore,இந்தியா
21-அக்-202116:30:57 IST Report Abuse
Ketheesh Waranஅதிமுக பாஜக கூட்டணி இரண்டு கட்சிகளையும் அழித்துவிடும் அதுதான் கடந்த 3 தேர்தல்களில் நடந்தது. விரைவில் அதிமுக தமிழகத்தில் இருந்து இல்லாது போகயிருப்பதால் மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சிகள் அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டும். தமிழகத்தில் தமிழ் விரோத பாஜக காலூன்ற முடியாது கூடாது...
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
21-அக்-202112:04:00 IST Report Abuse
Ketheesh Waran கடந்த 3 தேர்தலில் அ.தி.மு.க. படு தோல்வியைத் தழுவியதன் காரணம் எடப்பாடி பழனிச்சாமி. பழனிச்சாமி நிரந்தரமாக அரசியலைவிட்டு ஒதுங்கவேண்டும் அல்லது பழனிசாமி ஜெயக்குமார் போன்றோர் கட்சியைவிட்டு நீக்கப்படவேண்டும் இவர்களின் ஒரே நோட்கம் பழனிச்சாமியை முன்னிலைப்படுத்துவது தான். பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தினகரன்கட்சியை வழிநடத்தவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X