உள்ளே; வெளியே: பழனிசாமி வியூகம்! பன்னீர்செல்வம் மவுனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளே; வெளியே: பழனிசாமி வியூகம்! பன்னீர்செல்வம் மவுனம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (12)
Share
சென்னை: அ.தி.மு.க., பொன்விழா ஆண்டை ஒட்டி, ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு சசிகலா சென்று, மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க., கொடி ஏற்றி, கல்வெட்டு திறந்தார். அடுத்ததாக, விழுப்புரம் மாவட்டத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். சசிகலா பங்கேற்ற நிகழ்ச்சியில், அ.ம.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தான் பங்கேற்றனர்; அ.தி.மு.க., தொண்டர்கள் பங்கேற்கவில்லை. 'சசிகலாவை
OPS, EPS, ADMK

சென்னை: அ.தி.மு.க., பொன்விழா ஆண்டை ஒட்டி, ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு சசிகலா சென்று, மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க., கொடி ஏற்றி, கல்வெட்டு திறந்தார். அடுத்ததாக, விழுப்புரம் மாவட்டத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். சசிகலா பங்கேற்ற நிகழ்ச்சியில், அ.ம.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தான் பங்கேற்றனர்; அ.தி.மு.க., தொண்டர்கள் பங்கேற்கவில்லை. 'சசிகலாவை சேர்க்க வேண்டாம்' என்பதில், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உறுதியாக உள்ளார்.


latest tamil news



'கடந்த 2001, 2011, 2016 போல, 2026ல் பலமான கூட்டணி அமைத்து வெற்றி பெறலாம். அ.ம.மு.க.,வுக்கு தற்போது, 2.5 சதவீதம் ஓட்டுகள் உள்ளதால், தினகரனை கூட்டணியில் சேர்க்கலாம்; ஆனால், சசிகலாவை சேர்க்க வேண்டாம்' என, பழனிசாமி கணக்கு போட்டு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார்.

'உள்ளே, வெளியே' கணக்கை பொறுமையாக கேட்ட பன்னீர்செல்வம், வழக்கம்போல் மவுனத்தை தன் பதிலாக கொடுத்துள்ளார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியோ?

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X