வெளிநாட்டு பரிசுகள் விற்பனை; இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிற நாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை விற்பனை செய்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளன.நம் அண்டை நாடான பாக்., விதிகளின்படி ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பெறும் பரிசுகளை வெளிப்படையாக ஏலத்தில் விடவோ அல்லது அரசின் சொத்தாக பராமரிக்கவோ வேண்டும்.ஆனால் வெளிநாடுகளில் கிடைத்த
Pakistan, ImranKhan, Gift Things, பாகிஸ்தான், இம்ரான் கான், பரிசு பொருள்

லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிற நாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை விற்பனை செய்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளன.

நம் அண்டை நாடான பாக்., விதிகளின்படி ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பெறும் பரிசுகளை வெளிப்படையாக ஏலத்தில் விடவோ அல்லது அரசின் சொத்தாக பராமரிக்கவோ வேண்டும்.ஆனால் வெளிநாடுகளில் கிடைத்த பரிசுகளை பிரதமர் இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வளைகுடா நாட்டு இளவரசர் பரிசாக அளித்த 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடிகாரத்தை, இம்ரான் தன் நண்பரிடம் கொடுத்து துபாயில் விற்பனை செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.


latest tamil news



இதற்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவின் துணை தலைவருமான மரியம் நவாஸ், பாக்., மக்கள் இயக்க தலைவர் மவுலானா பாஸ்லுார் ரகுமான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.'இம்ரானின் நடவடிக்கை தேசத்தின் அவமானம்' என பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவின் பஞ்சாப் மாகாண தலைவர் ராணா சனாவுல்லா கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
21-அக்-202116:29:25 IST Report Abuse
GANESUN துபாய் அரசுக்கு தெரியல்ல மம்சர்ல ஒரு விஷம் கலந்த காஞ்சா செடி வளருதுன்னு..அந்த பேரால துபாய் நாட்டுக்கே அசிங்கம்ன்னு. யாராவது துபாயில இருக்கிறவங்க அரசாங்கத்துக்கு தெரிவிச்சா நல்லது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
21-அக்-202115:37:59 IST Report Abuse
Vena Suna ஆமாம். பரிசுகள் பதவிக்கு கொடுக்கப்பட்டது. அந்த திம்மப்பன் தன கடனை அடைக்க விற்க அல்ல.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-அக்-202114:57:18 IST Report Abuse
sankaseshan ஏண்டா ஒன்றைக்கண்ணா நமது PM பரிசு பொருட்களை ஏலத்தில் விட்டு பணத்தை அரசு கஜானாவில் சேர்கிறார் உனக்கு 3 கண்கள் இருந்தும் குருட நாய் இருக்கிறாய் இத்தாலிய அம்மாவீட்டு வேலைக்காரி ஜனாதிபதி யாக இருந்தபொழுது பரிசுகளை 2 லாரியில் நாக்பூருக்கு லவட்டிக்கொண்டு போனாலே ,அப்போ நீ தூங்கி கொண்டிருந்தாயா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X