தமிழகத்தில் சைபர் கிரைம் 55 சதவீதம் அதிகரிப்பு; நம் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் கொள்ளை

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
மதுரை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின்போது 55 சதவீதம் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பணம் திருட்டு, ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல் போன்றவை முதலிடத்தில் உள்ளன.கொரோனா ஊரடங்கின்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்தவாறே பணிபுரிந்தனர். மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதன்காரணமாக
Tamilnadu, Cyber Crime, OTP, Password, தமிழகம், தமிழ்நாடு, சைபர் கிரைம், குற்றம், கொள்ளை

மதுரை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின்போது 55 சதவீதம் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பணம் திருட்டு, ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல் போன்றவை முதலிடத்தில் உள்ளன.

கொரோனா ஊரடங்கின்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்தவாறே பணிபுரிந்தனர். மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதன்காரணமாக தொழில்நுட்பங்கள் தெரியாதவர்கள்கூட அதை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே சைபர் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகிவிட்டது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓ.டி.பி., எண் கேட்பது போன்றவைதான் சைபர் கிரைம் என பலரும் கருதியிருந்த நிலையில், கண்ணுக்கு தெரியாத வகையில் நம்மை சுற்றி பல்வகை சைபர் கிரைம் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன என எச்சரிக்கிறார் மதுரை ஜியோமியோ இன்பர்மேட்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் தினேஷ்பாண்டியன்.

இது குறித்து ஆய்வு செய்து வரும் அவர் கூறியதாவது: கடந்தாண்டு சைபர் குற்றங்கள் அதிகம் நடந்த நகரங்களில் சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு. 18 வயதிற்குட்பட்டவர்கள் அதிகம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு ஏமாந்ததே இதற்கு காரணம். பெற்றோருக்கு தெரியாமல் போன் வழியாக ஆன்லைனில் விளையாடும்போது வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே போன்ற ஏதாவது ஒரு வழியில் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். அடுத்தடுத்து மாணவர்களுக்கு இழந்த பணத்தை மீட்கலாம் எனக்கூறி மூளைச்சலவை செய்து வங்கி கணக்கில் இருந்து முழுவதும் பணத்தை சுருட்டுகிறார்கள்.


latest tamil newsசமீபத்தில் கூட மதுரை மாணவி ஒருவரால் பெற்றோர் வீடு கட்ட சேமித்து வைத்திருந்த ரூ.7 லட்சம் பறிபோனது. அதேபோல் வாட்ஸ் ஆப், டெலிகிராமில் நாம் ஏதாவது ஒரு குழுவில் இருப்போம். அதில் உள்ள யாராவது ஒருவர் நமக்கு தனியாக 'ஹாய்' எனக்கூறி மெசேஜ் அனுப்பி நம்மிடம் பழக ஆரம்பிப்பார். நாளடைவில் அது வீடியோ காலில் பேசும் அளவிற்கு மாறி அந்தரங்கம் வரை செல்லும். அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறிப்பார்கள். இப்படி ஏமாந்தவர்கள் 10 சதவீதம்பேர் கூட புகார் கொடுக்க முன்வருவதில்லை.

தமிழகத்தில் இவ்வகை குற்றமும், பணத்திருட்டு குற்றமும் அதிகமாக நடக்கிறது. சமீபகாலமாக ஆன்லைனில் லோன், கிரெடிட் கார்டு என நம்மை மோசடி செய்ய பலரும் பலவிதமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமலேயே நம் விபரங்கள் பல இடங்களில் பரவி கிடக்கிறது. அதுவே நமக்கு ஆபத்தாகிவிடுகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். இவ்வாறு கூறினார்.


இது புது மோசடி


latest tamil news


மதுரை களிமங்கலம் அருகே எம்.குன்னத்துாரைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா 32. தனியார் நிறுவன எலக்ட்ரீசியன். இவரது ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., கார்டு அக்.,16ல் காணாமல் போனது. இதனால் அந்த கார்டை 'பிளாக்' செய்ய கூகுளில் பார்த்து ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது ரிங் ஒலித்து 'கட்' ஆனது. சில நிமிடங்களில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி செந்தில்ராஜாவை தொடர்பு கொண்ட நபர், வங்கி விபரங்கள் குறித்து விசாரித்தார்.

பிறகு கூகுள் பே மூலம் பணபரிவர்த்தனை நடக்கிறதா என உறுதி செய்ய வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து மொத்தம் ரூ.99,999ஐ அனுப்புமாறு கூற, செந்தில்ராஜாவும் அவ்வாறே செய்ய பணம் பறிபோனது. இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்., கார்டு காணாமல் போன பதட்டத்தில் அந்த நபர் கேட்க கேட்க பணம் அனுப்பி ஏமாந்ததாக புலம்பினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202113:35:33 IST Report Abuse
அப்புசாமி புடிச்சவங்களை தண்டிச்சாத்தானே குற்றங்கள் குறைவதற்கு. இங்கே உளுத்துப் போன சட்டங்களை வெச்சு ஒரு ...முடியாது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-அக்-202110:28:41 IST Report Abuse
duruvasar மாறாமல் தொடரும் மாற்றத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-அக்-202109:53:48 IST Report Abuse
A.George Alphonse இதுதான் டிஜிட்டல் இந்தியா. paperless பண பரிவர்த்தனை.
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
21-அக்-202114:58:46 IST Report Abuse
தமிழன்ஓ இது தான் டிஜிட்டல் இந்தியாவா அல்போன்சு? ஒங்களுக்கு பல விஷயம் தெரிஞ்சுருக்கு சார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X