சிறுபான்மையினரை பாதுகாக்க சட்டம்; ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை| Dinamalar

சிறுபான்மையினரை பாதுகாக்க சட்டம்; ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை

Added : அக் 21, 2021 | கருத்துகள் (8)
Share
டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த 'சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என, பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகை, 16.8 கோடி; இதில், 16 லட்சத்திற்கும் அதிகமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உள்ளனர். இந்நிலையில், கடந்த
Bangladesh, Anti Hindu, Violence, Requires, Sheikh Hasina, Government, Act, வங்கதேசம், சிறுபான்மையினர், ஹிந்து, பாதுகாப்பு, சட்டம், அரசு, கோரிக்கை

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த 'சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என, பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகை, 16.8 கோடி; இதில், 16 லட்சத்திற்கும் அதிகமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் வங்க தேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் வன்முறைக் கும்பல் வெறியாட்டம் நடத்தியது. கோயில்கள் சூறையாடப்பட்டன. சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டன. ஹிந்துக்களின் 20 வீடுகளுக்கு வன்முறைக் கும்பல் தீ வைத்தது. 66 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. இந்த வன்முறையை கண்டித்து டாக்கா பல்கலை., பேராசிரியர்கள், வீதி நாடகம், மனித சங்கிலி போராட்டம் ஆகியவற்றை நடத்தினர்.


latest tamil news


நவகாளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை முன்னாள் துணை வேந்தர் வஹிதுசமான், ''மதவெறியர்களின் வன்முறையை ஒடுக்க, சிறுபான்மையினரை பாதுகாக்கும் சட்டத்தை அரசு உடனடியாக இயற்ற வேண்டும்,'' என, வலியுறுத்தியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை தடுக்க வேண்டும் என, குல்னா பல்கலை பேராசிரியர்கள் சங்கம் மற்றும் முன்னணி மாணவர் கூட்டமைப்பின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X