பொது செய்தி

இந்தியா

100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி; இந்தியா அபார சாதனை

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (91)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டு மக்களுக்கு, 100 கோடி கோவிட் தடுப்பூசி 'டோஸ்'களை செலுத்தி, இந்தியா இன்று (அக்.,21) சாதனை படைத்துள்ளது. இதற்கு பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 130 கோடி பேர்களின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றியை உணர்கிறோம். இது பெரும் வரலாற்று சாதனை என்றும் கூறியுள்ளார்.நம் நாட்டில், கொரோனா
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: நாட்டு மக்களுக்கு, 100 கோடி கோவிட் தடுப்பூசி 'டோஸ்'களை செலுத்தி, இந்தியா இன்று (அக்.,21) சாதனை படைத்துள்ளது. இதற்கு பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 130 கோடி பேர்களின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றியை உணர்கிறோம். இது பெரும் வரலாற்று சாதனை என்றும் கூறியுள்ளார்.

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசியை செலுத்தி முடிக்க வேண்டும் என்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று, மக்களுக்கு ஒரே நாளில் 2.5 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்.,21) காலை 8 மணி நிலவரப்படி, 99.85 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டிருந்தன.


latest tamil news



தொடர்ந்து நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பலனாக 100 கோடி டோஸ்கள் என்னும் மைல்கல்லை கடந்து இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 18,454 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,78,831 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விகிதம் 98.15 ஆக உள்ளது.

இந்த சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
22-அக்-202100:30:28 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மோடி ஏன் தடுப்பூசி போட்டுக்கல என்று கேட்ட அதே நாற வாய்கள் இன்று மோடி அரசுக்கு இதில் பெருமை இல்லை விஞ்ஞானிகளுக்கும், தடுப்பூசி பணியில் தங்களது உழைப்பை அர்ப்பணித்த சுகாதார ஊழியர்களுக்கும் மட்டுமே பெருமை என்றெல்லாம் பட்டியல் போடுகின்றன
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
21-அக்-202123:17:41 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் எம்பியின் கட்சிக்கு பெயர் இல்லை. சுயேச்சையாக நின்று ஒரு ஓட்டு, ஒரே ஒரு ஒட்டு வாங்கியவர் பாஜக காரர். முன்களப்ஸ் புலனாய்வு அட்வென்ச்சர்ஸ் 💪💪💪💪
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
21-அக்-202122:20:23 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பாமரன்குற டீம்கா எடுபிடி வாயால மோடியை பாராட்டணும்ன்னு நினைச்சு அவனுக்கு பதில் சொல்லிக்கிட்டு ஏம்பா நேரத்தை வீணாக்குறீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X