பொது செய்தி

தமிழ்நாடு

திருவொற்றியூர்- துறைமுகம் இடையே கடல் பாலம்: கன்டெய்னர் போக்குவரத்துக்கு புதிய திட்டம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: சென்னை எண்ணுார் விரைவு சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல், விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், திருவொற்றியூர் - துறைமுகம் இடையே, வங்கக் கடலில் பாலம் அமைக்க, தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்கள் வாயிலாக, பல்வேறு
திருவொற்றியூர், துறைமுகம்,  கடல் பாலம், கன்டெய்னர் போக்குவரத்து, புதிய திட்டம், சாத்தியக்கூறு, ஆணையம்

சென்னை: சென்னை எண்ணுார் விரைவு சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல், விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், திருவொற்றியூர் - துறைமுகம் இடையே, வங்கக் கடலில் பாலம் அமைக்க, தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.

சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்கள் வாயிலாக, பல்வேறு நாடுகளுக்கு சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கன்டெய்னர்களில் வரும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும், இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கவும், ஏராளமான கன ரக லாரிகள், இந்த இரண்டு துறைமுகங்களுக்கும் வந்து செல்கின்றன. நுாறடிசாலை, பொன்னேரி - மீஞ்சூர் - பஞ்சட்டி சாலை, எண்ணுார் எக்ஸ்பிரஸ் சாலை ஆகியவற்றை கன ரக வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலைகளில் கன ரக வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் கன ரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.


latest tamil news


இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எண்ணுார் விரைவு சாலைக்கு மாற்றாக, திருவொற்றியூர் - சென்னை துறைமுகம் இடையே, 7.6 கி.மீ.,க்கு வங்கக் கடலில் பாலம் அமைத்து, மேம்பால சாலையாக பயன்படுத்த மாநில அரசு விரும்புகிறது. சமீபத்தில், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, இதுகுறித்து வலியுறுத்தினார். மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, இத்திட்டம் குறித்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: வடசென்னையில் நிலவும் கன ரக சரக்கு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காகவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், எண்ணுார் விரைவுச்சாலை, 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில், 2012 முதல் போக்குவரத்து நடந்து வருகிறது. வாகனங்கள் நடமாட்டம் அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. எனவே, வரும் கால போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திருவொற்றியூர் - துறைமுகம் இடையே கடல்வழி பாலம் அமைக்க வேண்டும் என, தமிழக அரசு விருப்பம் தெரிவித்து உள்ளது.

திருவொற்றியூர் முதல், துறைமுகம் வரை பல்வேறு மீனவ குப்பங்கள் உள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்த மீனவ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. கடலில் பணிகளை மேற்கொள்ளும் போது, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெற வேண்டும். கடலில் பாலம் கட்டுவதற்கு, அதிக காலம் தேவைப்படும்; செலவும் மூன்று மடங்கு அதிகரிக்கும். அதே நேரத்தில், எண்ணுார் விரைவு சாலையில், போதுமான இடவசதி உள்ளது.

மெட்ரோ ரயில் போல, திருவொற்றியூர் முதல் துறைமுகம் வரை, இச்சாலையில் உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கலாம். இதன் வாயிலாக, எதிர்கால போக்குவரத்து தேவை பூர்த்தியாகும். இருப்பினும், சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்த பின்பே, கடலில் பாலம் அமைப்பதா, எண்ணுார் விரைவு சாலையில் உயர்மட்ட பாலம் அமைப்பதா என்பது இறுதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
21-அக்-202115:23:50 IST Report Abuse
K E MUKUNDARAJAN இந்த திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசால் தான் நிறைவேற்றப்படும் . உள்ளுர் பஞ்சாயத்து ஒன்றிய அரசு ஒன்றும் தலையிட முடியாது . முட்டுக்கட்டைதான் கொடுக்கலாம் .
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-202114:45:01 IST Report Abuse
Krishna Now no poralis will come and shout. Including jalra thol thiruma. DMK is the ruthless and money minded party.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
21-அக்-202113:31:23 IST Report Abuse
Yezdi K Damo என்னடா இது ரெண்டு கம்பெனி ஆளுங்க குரெய்க்கிறாங்களேன்னு பாத்தேன் .அப்புறம் தான் தெரிஞ்சது இது தமிழக அரசு திட்டம்ன்னு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X