அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகனுக்கு பதவி ! ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் விலகல்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
கோவை: வைகோ மகனுக்கு கட்சியில் பதவி அளித்ததால் அதிருப்தி தெரிவித்து ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இவர் வைகோ கட்சி துவங்கியது முதல் கட்சியில் பணியாற்றியவர் ஆவார்.தி.மு.க.,வில் இருந்த போது வாரிசு அரசியலை விமர்சனம் செய்து ம.தி.மு.க.,வை உருவாக்கியவர் வைகோ. இவர் தனது மகனுக்கு கட்சியில் பதவியை அளித்திருப்பது பெரும் விமர்சனத்தை

கோவை: வைகோ மகனுக்கு கட்சியில் பதவி அளித்ததால் அதிருப்தி தெரிவித்து ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இவர் வைகோ கட்சி துவங்கியது முதல் கட்சியில் பணியாற்றியவர் ஆவார்.



latest tamil news



தி.மு.க.,வில் இருந்த போது வாரிசு அரசியலை விமர்சனம் செய்து ம.தி.மு.க.,வை உருவாக்கியவர் வைகோ. இவர் தனது மகனுக்கு கட்சியில் பதவியை அளித்திருப்பது பெரும் விமர்சனத்தை உருவாக்கியது. கட்சி தொண்டர்கள் பலர் மறைமுகமாக எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகுவதாகவும் மேலும் புதிய இயக்கத்தை துவக்க போவதாகவும் கூறியுள்ளார். கோவையை சேர்ந்த இவருக்கு சில ஒன்றிய செயலர்களும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
இது தொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


விடைபெறுகிறேன் !


கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருகிறேன். கட்சியில் பொறியாளர் அணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், இளைஞர் அணி செயலாளர் என்று பல பொறுப்புகளில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வந்துள்ளேன். இயக்க தோழர்கள் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பை தந்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !

எனது பொதுவாழ்வின் மூலம் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி கடுகளவு கூட நான் பலன் அடைந்ததில்லை.அரசியலை எனது சுய லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதை என் கொள்கையாகவே வைத்துள்ளேன். எனது சட்டப்போராட்டங்களை தொடரவும்,மக்கள் பணிகளை தொடரவும் எனக்கு சிறு அமைப்பாவது தேவைப்படுகிறது.

அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன்.இது அரசியல் இயக்கமல்ல ! ஆனால் அரசியலை தூய்மைப்படுத்தவும் பயன்படும்.நான் நேசிக்கும் தலைவர் வைகோ, என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது இன்று மரமாகிவிட்டது.அதை என்னால் வெட்ட இயலவில்லை ! எந்த காரணம் சொல்லியும் என்னால் சமாதானப்படுத்திக்கொள்ள இயலவில்லை. என் தலைவரா ? அவர் விதைத்த கொள்கையா ? என்ற போராட்டத்தில் அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது.என்ன செய்வேன் நான் ?


latest tamil news



எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது என்று எதை பொதுச்செயலாளர் சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்றுவிட நினைத்து கடிதம் எழுதினேன்.ஆனால் பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னை கட்டிப்போட்டு விட்டது. ஆனால் இன்று ! கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-அக்-202120:35:37 IST Report Abuse
Barakat Ali டீம்கால ஐக்கியமாக நல்ல டைம் கொள்கையில் ஒன்னும் பெரிசா வித்தியாசம் கிடையாது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
21-அக்-202118:05:48 IST Report Abuse
சீனி கட்சி சொத்தை காப்பாத்த ஆள் வேணும் இல்லையா, அதான் மகனை தேர்தெடுத்தேன் என்று கூட சொல்லுவார்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
21-அக்-202117:50:20 IST Report Abuse
Kumar பெரியாரின் வாரிசு வைகோ எப்படி இருப்பார்.இவர் யாரின் கைகூலி என்று அனைவருக்கும் தெரியும். ஸ்டர்லைட்டில் முதல்முதலில் கையூட்டு பெற்று ,அதை மூட காரணமாக இருந்தவர்.அவரின் சொந்த ஊரிலேயே அதிக வாக்கு பெற முடியாது இவரால். அதை மூடி மறைக்க இப்பொழுது மகனை உள்ளே நுழைத்துள்ளார்.சொத்துக்களைக் காப்பாற்ற வேறு என்ன வழி இருக்கிறது. வாழ்க வலமுடன். வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X