மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்; மருத்துவர்கள் சாதனை

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
நியூயார்க்: முதல்முறையாக மனிதருக்கு மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இருக்கும் நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பாக தொடர்ந்து
Surgeons Attached, Pig Kidney, Human, பன்றி, சிறுநீரகம், மனிதர், மருத்துவர், சாதனை

நியூயார்க்: முதல்முறையாக மனிதருக்கு மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.

மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இருக்கும் நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பாக தொடர்ந்து சோதனை முயற்சிகள் நடந்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக மனித உடலுக்கு மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


latest tamil news


உறவினர்கள் அனுமதியுடன் அப்பெண்ணுக்கு பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் புதிதாக பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு சரியான அளவு சிறுநீரை வெளியேற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எவ்வித எதிர்ப்பையும் ஆற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். விலங்குகளின் உறுப்புகள் மனிதர்களுக்கு பொருத்தும் இந்த சோதனை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதால், மனித உறுப்புகளின் பற்றாக்குறையை போக்குவதற்கு உதவும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
21-அக்-202118:58:11 IST Report Abuse
Soumya இது மூர்க்கனுங்களுக்கு புடிக்காத சமாச்சாரமாச்சேப்பா ஹீஹீஹீ
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-அக்-202117:46:42 IST Report Abuse
Sanny போச்சு,போச்சு, சீனாவின் மனித உடல் உறுப்புக்கு பலத்த அடி விழப்போகுது. உலகில் பெரும் செல்வந்தர்கள், சீனாவுக்குபோயி கிட்னி மாற்று உறுப்பு பெற்று வருகிறார்கள். சீனாவில் பல நூறு கைதிகள் வருடத்துக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவருது, அந்த கைதிகளின் கிட்ணி, மற்றும் உறுப்புக்கள் விட்பனை செய்யப்படுது. ஒரு கிட்னி மாற்றத்துக்கு ஐம்பதாயிரம் ஆஸ்திரேலிய டாலர்வரை விலை போகுது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-அக்-202114:12:02 IST Report Abuse
Ramesh Sargam இவ்வளவு நாள் இறைச்சிக்காக கொல்லப்பட்ட பன்றிகள், இனி அவைகளின் சிறுநீரகத்திற்காக கொள்ளப்படும். பாவம். 'பெண் பாவம் சும்மா விடாது' - இது பழமொழி. 'பன்றிகள் சாபம் சும்மா விடவே விடாது' - இது புதுமொழி
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-அக்-202117:33:56 IST Report Abuse
Sanny கவலை வேண்டாம், தாலிபானில் பன்றிகளை கொல்லமாட்டாங்க, மனிதனை கொன்னு கிட்னி எடுப்பாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X