டுவிட்டர், பேஸ்புக் புறக்கணிப்பு; தனக்கென சமூக வலைதளத்தை தொடங்கினார் டிரம்ப்!

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன்: டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புறக்கணிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், முறைகேடு நடைபெற்றதாக அப்போது அதிபராக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் நாடாளுமன்றக் கலவரத்தை தூண்டியதாகக் கூறி, டுவிட்டர்,

வாஷிங்டன்: டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புறக்கணிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார்.



latest tamil news



கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், முறைகேடு நடைபெற்றதாக அப்போது அதிபராக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் நாடாளுமன்றக் கலவரத்தை தூண்டியதாகக் கூறி, டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கின. இது நடந்து 9 மாதங்களுக்குப் பின் தற்போது, 'உண்மை சமூகம்' (ட்ரூத் சோஷியல்) என்ற பெயரில் தனக்கென பிரத்யேக சமூக வலைதளத்தை டிரம்ப் நேற்று தொடங்கி உள்ளார்.


latest tamil news



இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், 'டுவிட்டர் போன்ற வலைதளங்களில், தலிபான்கள் ஆதிக்கம் அதிகயளவில் இருக்கிறது. 'ட்ரூத் சோஷியல்' மூலம் சமூக வலைத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவோம். வரும் நவ., மாதம் தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சி, செய்திகள் கொண்ட வீடியோ சேவையையும் வழங்க திட்டமிட்டு உள்ளோம்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
21-அக்-202118:41:49 IST Report Abuse
Vena Suna அருமை...வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
21-அக்-202112:49:26 IST Report Abuse
Kalyan Singapore இந்த சைட் க்கு "Trumpet" என்ற பெயர் பொருத்தமாக இருக்குமே
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
21-அக்-202112:19:30 IST Report Abuse
raja மானஸ்த்தண்டா... இந்த டிரம்ப் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X