பொது செய்தி

இந்தியா

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: வரும் 23ல் ஆர்பாட்டம் நடத்த இஸ்கான் அழைப்பு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: வங்கதேசத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் ஹிந்துக்கள் மீது, சமீப நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக கடந்த 13ம் தேதி குமிலா என்ற இடத்தில், துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்துக்களின்

புதுடில்லி: வங்கதேசத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் ஹிந்துக்கள் மீது, சமீப நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக கடந்த 13ம் தேதி குமிலா என்ற இடத்தில், துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.



latest tamil news



இந்நிலையில், கடந்த 16ம் தேதி, வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவில் மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாயாபூர் மற்றும் கோல்கட்டாவிலுள்ள இஸ்கான் உறுப்பினர்கள் கடந்த 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, கீர்த்தனைகள் பாடி, 'ஹரே கிருஷ்ணா' கோஷமிட்டனர். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு கோரும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.


latest tamil news



கோல்கட்டா இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் ராதாராமன் தாஸ் தெரிவித்து உள்ளதாவது: அனைத்து ஹிந்துக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் வங்கதேச அரசை நாங்கள் அழைக்கிறோம். வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா.,வுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.



தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 23ம் தேதி வங்கதேசத்தின் அனைத்து தூதரகங்கள், துணைத் தூதரகங்கள், உயர் ஆணையங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202118:31:31 IST Report Abuse
அப்புசாமி ஒன்றிய அரசுலேருந்து யார் யாரு சவுண்டு உட்டாங்க சொல்லுங்களேன்? இல்லே எனக்குதான் கேக்கலியா?
Rate this:
Cancel
Ganesh - Chennai,இந்தியா
21-அக்-202114:14:27 IST Report Abuse
Ganesh வங்கதேச மக்கள் தொகையில் 10% அதாவது 1.6 கோடி பேர் சிறுபான்மையினர்
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
21-அக்-202117:04:15 IST Report Abuse
DVRRஇங்கேயும் அதே கதை தான் இங்கு 16 சதவிகிதம் முஸ்லிம்கள் 22 கோடி/ 134.54 கோடியில் கிறித்துவர்கள் இங்கு 5 சதவிகிதம் 7 கோடி/ 134.54 ஆனால் இவர்கள் மைனாரிட்டிகள்??????மைனாரிட்டி என்றால் என்ன???வெறும் மதமா ஜனத்தொகையா...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
21-அக்-202113:44:00 IST Report Abuse
தமிழ்வேள் மூர்க்க நாடுகளை ஒட்டுமொத்தமாக சுடுகாடாக்குவது ஒன்றுதான் ,அமைதிக்கு வழி ..பகவான் கிருஷ்ணர் வழிகாட்டட்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X