பொது செய்தி

இந்தியா

" 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " - பிரதமர் மோடி

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
புதுடில்லி: " 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " என இன்று டில்லி எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் மையத்தில் நடந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.இந்திய வரலாற்றில் இன்றைய தினம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை கண்டு உலகமே வியக்கிறது. தடுப்பூசி போட்ட ஒவ்வொருவருக்கும் இந்த சாதனையில் பங்கு உண்டு. 100
VaccineCentury, Congratulations India, Congrats India பிரதமர்மோடி, தடுப்பூசி, பிரதமர், நரேந்திரமோடி

புதுடில்லி: " 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " என இன்று டில்லி எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் மையத்தில் நடந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.


latest tamil news



இந்திய வரலாற்றில் இன்றைய தினம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை கண்டு உலகமே வியக்கிறது. தடுப்பூசி போட்ட ஒவ்வொருவருக்கும் இந்த சாதனையில் பங்கு உண்டு. 100 கோடி என்பது அவர்களது வெற்றி. இந்த சாதனை என்பது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம். 100 கோடி தடுப்பூசி என்ற வலிமையான கேடயத்தை நாடு பெற்றுள்ளது.
இந்த சாதனை படைக்க காரணமான தடுப்பூசி நிறுவன பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்களை பாராட்டுகிறேன். வலிமையான சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கி உள்ளது.
இன்று இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு பலம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை திறப்பதற்கு ஏதுவாக தனியார் துறை பங்களிப்பை வலுப்படுத்துவதற்கு மருத்துவ கல்வியில் மத்திய அரசு பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 400 மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.


நேரில் ஆய்வு




latest tamil news


100 கோடி தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்ட நிலையில், டில்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் நடக்கும் தடுப்பூசி முகாமை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார்.


பின்னர், சுகாதார பணியாளர்களை நோக்கி கையை உயர்த்தி காட்டி பாராட்டு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202123:01:05 IST Report Abuse
தேச பக்தன் இங்கு உள்ள பெரும்பாலான பதிவுகள் மோடி எதிர்ப்பாகத்தான் உள்ளது. இந்த தேச மக்கள் அனைவரையும் காத்து உலக மக்களையும் காக்க வேண்டும் என்று என்னி மோடிஜி விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் கொடுத்ததால் இந்த சாதனை வசப்பட்டது. இதற்கு விடை 2024 தேர்தலில் தெரியும், பிஜேபி 400
Rate this:
Cancel
SadaIndian - Chennai,இந்தியா
21-அக்-202120:19:20 IST Report Abuse
SadaIndian விசு ஐயர் இன்று இருபத்திநாலு கருத்து தெரிவித்து சாதனை படைத்தார். நம்ப ஐயா அப்துல் கலாம் சொன்ன மாதிரி இவர் கனவில் பார்த்து பகிர்ந்தடு இன்றைய அதிகம் விமர்சித்தவை பகுதியில் இடம் பெற்றார்.
Rate this:
Cancel
21-அக்-202118:27:59 IST Report Abuse
அப்புசாமி இன்னும் கொஞ்ச நாளில் கையில் இருந்த காசையெல்லாம் தடுப்பூசி போட்டே செலவழிச்சுட்டோம்னு கணக்கு காட்டாமலா போகப் போறீங்க? ஏற்கனவே எங்க தலயில் 119 லட்சம் கோடி கடன் இருக்குன்னு நிர்மலா ஜீ தெரிவிச்சிருக்காரு... நீங்க உங்க பங்குக்கு எத்தனை லட்சம் கோடி தலையில் கட்டப் போறீங்களோ? சாதனையெல்லாம் பாத்து வியக்க ரெடியா இருக்கோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X