" 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " - பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

" 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " - பிரதமர் மோடி

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (58)
Share
புதுடில்லி: " 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " என இன்று டில்லி எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் மையத்தில் நடந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.இந்திய வரலாற்றில் இன்றைய தினம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை கண்டு உலகமே வியக்கிறது. தடுப்பூசி போட்ட ஒவ்வொருவருக்கும் இந்த சாதனையில் பங்கு உண்டு. 100
VaccineCentury, Congratulations India, Congrats India பிரதமர்மோடி, தடுப்பூசி, பிரதமர், நரேந்திரமோடி

புதுடில்லி: " 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " என இன்று டில்லி எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் மையத்தில் நடந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.


latest tamil newsஇந்திய வரலாற்றில் இன்றைய தினம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை கண்டு உலகமே வியக்கிறது. தடுப்பூசி போட்ட ஒவ்வொருவருக்கும் இந்த சாதனையில் பங்கு உண்டு. 100 கோடி என்பது அவர்களது வெற்றி. இந்த சாதனை என்பது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம். 100 கோடி தடுப்பூசி என்ற வலிமையான கேடயத்தை நாடு பெற்றுள்ளது.
இந்த சாதனை படைக்க காரணமான தடுப்பூசி நிறுவன பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்களை பாராட்டுகிறேன். வலிமையான சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கி உள்ளது.
இன்று இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு பலம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை திறப்பதற்கு ஏதுவாக தனியார் துறை பங்களிப்பை வலுப்படுத்துவதற்கு மருத்துவ கல்வியில் மத்திய அரசு பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 400 மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.


நேரில் ஆய்வு
latest tamil news


100 கோடி தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்ட நிலையில், டில்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் நடக்கும் தடுப்பூசி முகாமை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார்.


பின்னர், சுகாதார பணியாளர்களை நோக்கி கையை உயர்த்தி காட்டி பாராட்டு தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X