ரஷ்யாவில் கோவிட் பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு ஊதியத்துடன் விடுமுறை: அதிபர் புடின்| Dinamalar

ரஷ்யாவில் கோவிட் பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு ஊதியத்துடன் விடுமுறை: அதிபர் புடின்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021
Share
மாஸ்கோ: ரஷ்யாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதால், தலைநகர் மாஸ்கோவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு வாரத்திற்கு அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார்.ரஷ்யாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தாலும், அங்குள்ள மக்கள் தடுப்பூசி
Russia, Putin, Paid Holiday, Orders, Week Long, Rising, Covid-19, cases, ரஷ்யா, புடின், ஊதியம், விடுமுறை, கொரோனா, கோவிட், அதிகரிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதால், தலைநகர் மாஸ்கோவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு வாரத்திற்கு அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தாலும், அங்குள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதனிடையே அங்கு மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளன.


latest tamil news


இந்நிலையில், கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு அக்.,30 முதல் நவம்பர் 7-ம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு பணிபுரியும் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார். மேலும், கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் பொறுப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X