பொது செய்தி

இந்தியா

போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் வீட்டில் ஆய்வு; நடிகை வீட்டில் ரெய்டு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைதாகியுள்ள நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து எடுத்துச் சென்றனர். நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, லேப்டாப் மற்றும் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில்
ShahRukhKhan, AryanKhan, Mumbai Jail, ஷாருக்கான், ஆர்யன்கான், சிறை, போதைப்பொருள்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைதாகியுள்ள நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து எடுத்துச் சென்றனர். நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, லேப்டாப் மற்றும் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கப்பலி்ல் சென்றனர்.அப்போது, தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர், ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜாமின் கிடைக்காததால், மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.


மகனுடன் ஷாருக்கான் சந்திப்பு



latest tamil news



இந்நிலையில், அவரை, தந்தை ஷாருக்கான் இன்று சந்தித்து பேசினார். ஆர்யன்கான் கைதான பிறகு, தந்தை மகன் இடையே நிகழும் முதலாவது சந்திப்பு இதுவாகும். கைதிகளை சந்திக்க மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நடந்த இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனது தந்தை மற்றும் தாயாருடன் ஆர்யன்கான், வீடியோ கால் மூலம் பேசியிருந்தார்.

இந்த சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு சென்று வழக்கு குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து எடுத்து சென்றனர்.

அதேபோல், நடிகை அனன்யா பாண்டே வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், மொபைல்போன் மற்றும் லேப் டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர், நடிகையை, அலுவலகத்திற்கு வரவழைத்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
21-அக்-202121:36:52 IST Report Abuse
Rasheel அமைதி வழி பரம்பரை தொழிலை செய்து இருக்கிறான். பணம் உள்ள நடிகன் பையன் என்பதால் முட்டு கொடுக்க பல ஆயிரம் பேர். இதிலே மதம் வேற புகுந்து கொண்டது. கேட்க வேண்டுமா?
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
21-அக்-202117:04:34 IST Report Abuse
S.kausalya இதுல நடிகனின் மகனிடம் நடத்திய மருத்துவ ஆய்வில் போதை உட்கொண்டதற்கான ஆதாரம் இல்லை. இது நடிகரின் புகழை கெடுக்க ஜோடிக்க பட்ட நடவடிக்கை என இவர் சார்ந்த சில மத அமைப்பினரும் சில நடிகர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்து உள்ளனர்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
21-அக்-202115:46:12 IST Report Abuse
Vena Suna சும்மா விடாதீங்க இந்த ஆளுங்களை. நடிகர்கள் எல்லாருமே மோசம்...ஒன்று ரெண்டு பேர் தவிர
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X