இங்கிலாந்தில் குறையாத கோவிட் பரவல்: ஒரே நாளில் 50,000 பேர் பாதிப்பு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021
Share
Advertisement
லண்டன்: இங்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 49,639 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் பல்வேறு நாடுகளில் குறைந்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் தொற்றின் பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இங்கிலாந்தின்

லண்டன்: இங்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 49,639 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.



latest tamil news



கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் பல்வேறு நாடுகளில் குறைந்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் தொற்றின் பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இங்கிலாந்தின் சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளதாவது: நாட்டில் இதுவரை, 12 வயதுக்கு மேற்பட்ட 80 சதவீத மக்களுக்கு இரு தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news



இருந்தும் நேற்று (அக்., 20) ஒரே நாளில் புதிதாக 49,639 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டிலிருந்து இதுவரை இங்கிலாந்தின் கோவிட் பாதிப்பு 85.9 லட்சமாக உயர்ந்து உள்ளது. தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1.39 லட்சமாக உள்ளது. இதனால், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி முடிக்கி விடப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X