மின்சார காருக்கு இறக்குமதி வரியை குறையுங்கள்; டெஸ்லா நிறுவனம் கோரிக்கை

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் மின்சார காருக்கு இறக்குமதி வரியைக் குறைக்கும்படி பிரதமர் அலுவலகத்திற்கு டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லா, தனது மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும், பின்னர் கிடைக்கும்
Tesla, Tax Cut, Electric Vehicles, PMOffice, Requests, Report, டெஸ்லா, இறக்குமதி வரி, குறைப்பு, மினசார கார், எலன் மஸ்க்

புதுடில்லி: இந்தியாவில் மின்சார காருக்கு இறக்குமதி வரியைக் குறைக்கும்படி பிரதமர் அலுவலகத்திற்கு டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லா, தனது மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும், பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியாவில் உற்பத்தி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்தியாவில் மின்சார கார் இறக்குமதிக்கான வரி அதிகமாக உள்ளது டெஸ்லா நிறுவனத்திற்கு ஒரு பிரச்னையாக உள்ளது. உலக நாட்களிலேயே இந்தியா அதிக இறக்குமதி வசூலிப்பதாக டெஸ்லா தரப்பில் ஏற்கனவே கூறியிருந்தது.


latest tamil news



இதனால் இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரிப் பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியை சந்தித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் இதுகுறித்து ஆலோசனை நடத்த நிர்வாகிகள் சார்பில் நேரம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் டெஸ்லா நிறுவனத்திற்காக இறக்குமதி வரியை குறைத்தால், இந்தியாவின் உள்நாட்டு மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
21-அக்-202120:09:01 IST Report Abuse
M  Ramachandran அது தான் மத்திய அரசு முதலிலெயாயே கூறி விட்டதே. முதலில் யிந்தய்யா விற்கு இறக்கு மதி செய்து பிறகு கேஆளுங்கள் என்று. முதலில் கண்டிஷன் போராடுவதை நிறுத்துங்கள். இப்போர் டாடா நிறுவனம் மின்சார பட்டேலார்ரி கார்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டானா. இன்னும் கொஞ்ச நாளில் யுங்கள் கார் அளவுக்கு திறமயான கார் கலை தயாரித்து விடுவார்கள். சீனா வை பிர் காலத்தி நம்ப முடியாது என்று மேலும் இந்தியாவில் பாட்டரி தயாரிப்பிலும் டாடா வும் டி வி எஸ்ஸும் இணைந்து ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
21-அக்-202117:16:46 IST Report Abuse
raja அப்புறம் இங்குள்ள உடன்பிறப்பு மற்றும் விசிலடித்தான் குஞ்சிகள்..உங்களை மூணாவது கார்போர்ட்டுன்னு சொல்லுவானுவோ... மோடியின் பி எம் கேருக்கு நிதி அனுப்பிடீங்களான்னு கேப்பானுவோ? உங்களையும் வசைபாடுவானுவோ பரவா இல்லையா?
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
21-அக்-202116:48:37 IST Report Abuse
N.K டெஸ்லாவை விட டாடாவே இன்னும் சில ஆண்டுகளில் பல மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யக்கூடும். இறக்குமதி வரையை குறைக்கவேண்டியதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X