பொது செய்தி

இந்தியா

உத்தரகண்டில் கனமழை, நிலச்சரிவு: 54 பேர் பலி; 11 பேரை தேடும் பணி தீவிரம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டேராடூன்: உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 54 பேர் உயிரிழந்து உள்ளனர்; 11 பேர் மாயமாகி உள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் பரவலாக அதிகப்படியான கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் தொடர்

டேராடூன்: உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 54 பேர் உயிரிழந்து உள்ளனர்; 11 பேர் மாயமாகி உள்ளனர்.



latest tamil news



உத்தரகண்ட் மாநிலத்தில் பரவலாக அதிகப்படியான கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் இதுவரை 54 பேர் வரை பலியாகி உள்ளனர்; 11 பேர் மாயமாகி உள்ளனர்.


latest tamil news



'கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1,09,000 மற்றும் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என, உத்தரகண்ட் மாநில அரசு நேற்று (அக்., 20) அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று, கனமழையின் தீவிரத்தை அறிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரகண்ட் சென்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-202113:59:52 IST Report Abuse
 rajan T.V. செய்தி வாசிப்பாளர்கள் உத்ராகாண்ட் என்று வாசிக்கிறார்கள். சாமந்திப்பூவை சாமாந்தி பூ, அறுநூறு ரூபாயை ஆர் நூறு , தற்காலிகம் என்பது தாற்காலிகம், சாமர்த்தியம் என்பதை சாமார்த்தியம், பாயசம் என்பதை பாயாசம்.... இவ்வாறு தமிழ் உச்சரிப்புகள் மாறிக் கொண்டு வருகின்றன. தமிழ் தாங்கிகள் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. தமிழ் அகராதியை மாற்ற வேண்டிய அவசியம் வரும் போல் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X